ETV Bharat / sports

36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி - நீச்சலில் தங்கம் வென்ற கர்நாடக சிறுமி

author img

By

Published : Oct 6, 2022, 12:13 PM IST

Updated : Oct 6, 2022, 2:31 PM IST

குஜராத்தில் நடைபெற்று வரும் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் நீச்சலில் கர்நாடகவை சேர்ந்த 14 வயது சிறுமி ஹஷிகா தங்கப்பதக்கம் வென்றார்.

Etv Bharat36 ஆவது தேசிய  போட்டிகள் - கர்நாடக சிறுமி நீச்சலில் தங்கம்
Etv Bharat36 ஆவது தேசிய போட்டிகள் - கர்நாடக சிறுமி நீச்சலில் தங்கம்

ராஜ்கோட்: இந்தியாவின் ஒலிம்பிக் என கூறப்படும் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா , ராஜ்கோட் மற்றும் பவநகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் அணி ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நான்கு பேர் கொண்ட 4x200 மீட்டர் தொடர் நீச்சல் ரிலே போட்டியில் கர்நாடக வீராங்கனை ஹசிகா ராமசந்திரா வெற்றிக்கான இலக்கை போராடி அடைந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அஸ்தா சவுத்ரிக்கு அடுத்து 2 நிமிடங்கள் 19.12 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 200மீ பட்டாம்பூச்சிப் போட்டியில் சஜன் பிரகாஷ் வெற்றி பெற்றார். இதனையடுத்து இரண்டு வயது குழந்தையின் தாயான மகாராஷ்டிரா டைவர் ஹ்ருத்திகா ஸ்ரீராம் இலக்கை கடந்து தனிநபர் ட்ரெபிளைப் பூர்த்தி செய்தார். பெண்களுக்கான 10மீ பிளாட்ஃபார்ம் போட்டியில் வெற்றி பெற்று தங்க ஹாட்ரிக் சாதனையை தொடர்ந்தார்.

பதக்கப் பட்டியல் : தற்போது 40 தங்கம் மற்றும் 89 பதக்கங்களுடன், சர்வீசஸ் அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஹரியானா 25 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 24 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்று வரை நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 25 அணிகள் குறைந்தபட்சம் ஒரு தங்கம் மற்றும் 32 அணிகள் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளன.

டென்னிஸில் தங்கம்: அகமதாபாத்தில் உள்ள ரிவர்ஃபிரண்ட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் வளாகத்தில் நடைபெற்ற பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் விளையாடிய குஜராத் வீராங்கனை ஜீல் தேசாய் அவரது சொந்த மாநிலத்திற்கு தங்கம் பெற்று தந்தார். நடப்பு சாம்பியனான அங்கிதா ரெய்னா இல்லாத நிலையில், மூன்றாம் நிலை வீராங்கனையான ஜீல் தேசாய் 6-2, 3-2 என்ற கணக்கில் கர்நாடகாவின் சர்மதா பாலுவை வீழ்த்தினார். இந்த ஒற்றையர் பிரிவின் வேறொரு போட்டியில் மகாராஷ்டிராவின் அர்ஜுன் காதேவிற்கு ஏற்பட்ட உடல் பிரச்சனைகளால் தமிழ்நாட்டின் மணீஷ் சுரேஷ்குமா 2-6, 6-1, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டுக்கு தங்கம் : ஐஐடி காந்திநகரின் ஸ்குவாஷ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டின் சுனைனா குருவில்லா பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் ஊர்வசி ஜோஷி முதல் இரண்டு செட்டை 11-9 மற்றும் 11-7 என்ற கணக்கில் வென்றார். ஆனால் சுனைனா இறுதிப் போட்டியில் மூன்று ஆட்டங்களில் வெறும் 13 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுத்து, வெற்றியாளர் ஆனார். இளம்பெண் அனாஹத் சிங், ராதிகா ரத்தோரை வீழ்த்தி வெண்கலம் வென்றார். டெல்லி அணி தங்கம் வென்ற அணியிலும் அனாஹட் பெரும் பங்கு வகித்தார்.

கூட்டு வில்வித்தையில் ரிஷப் ஏஸ்: அழகிய சன்ஸ்கர்தம் பள்ளியில் நடந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூட்டு வில்வித்தை போட்டியில் ரிஷப் யாதவ் (ஹரியானா) மற்றும் அதிதி கோபிசந்த் சுவாமி (மகாராஷ்டிரா) ஆகியோர் தங்கம் வென்றனர். ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ஹரியானா வில்வித்தை வீரரான ஓஜாஸ் பிரவின் டெட்டாலே (மகாராஷ்டிரா) 148-147 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இதேபோல், அதிதி கோபிசந்த் சுவாமி ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிரகதியை (டெல்லி) 144-143 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

லான் பால்ஸ்: அகமதாபாத் அருகே உள்ள கென்ஸ்வில்லி கோல்ஃப் அண்ட் கன்ட்ரி கிளப் மைதானத்தில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு லான் பால்ஸ் விளையாட்டின் பைனலில் அசாம் மாநில வீரர் சுனில் பகதூர் 16-9 என்ற கணக்கில் சௌமென் பானர்ஜியை (ஜார்கண்ட்) தோற்கடித்தார். நவ்நீத் சிங், ஆயுஷ் பரத்வாஜ், அபூர்வ் அசுதோஷ் ஷர்மா மற்றும் அபிஷேக் சுக் ஆகியோர் ஃபோர்ஸ் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளத்தை 15-14 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

மேலும் அசாம் ஜோடி தானியா சௌத்ரி மற்றும் நயன்மோனி சைகியா ஜோடி 17-10 என்ற கணக்கில் ஜார்கண்டின் லவ்லி சௌபே மற்றும் ரூபா ராணி டிர்கியை வீழ்த்தியது. மனு குமாரி பால், ஜெயா மற்றும் பிங்கி ஆகியோர் ஜார்கண்டின் சரிதா டிர்கி, அனாமிகா லக்ரா மற்றும் கவிதா குமாரி ஜோடியை 18-9 என்ற கணக்கில் வென்று டிரிபிள்ஸ் தங்கம் வென்றனர்.

இதையும் படிங்க:IND vs SA: தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

Last Updated : Oct 6, 2022, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.