ETV Bharat / sports

ஆசிய அளவிலான யோகா போட்டி - தங்கம் வென்ற தூத்துக்குடி, குமரி மாணவர்கள்!

author img

By

Published : Dec 11, 2019, 5:31 PM IST

தூத்துக்குடி: பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

Gold Medals
Gold Medals

ஆசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த ஆறாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷைன் யோகா பவர் மாணவர்கள் கனிஷ்கா, சஞ்சீவி, அபினேஷ், நிரஞ்சன் ஆகிய நான்கு பேர் உட்பட தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அதில், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ண இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் கனிஷ்கா ரிதமிக் யோகா பிரிவில் தங்கம் வென்றார். அதேபோல, தூத்துக்குடி ஶ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபினேஷ், சஞ்சீவி ஆகியோர் 14 மற்றும் 17 வயது பிரிவில் தங்கம் வென்றனர். இதுமட்டுமின்றி, முத்துவேல் செயின்ட் தாமஸ் அப்போசல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் நிரஞ்சன் பின்விளைவு பிரிவில், தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

Asian Yoga

இந்நிலையில், தங்கப் பதக்கத்துடனும் வெற்றிக்கோப்பையுடன் சென்னையிலிருந்து ரயில் மூலம் தூத்துக்குடி வந்த இவர்களுக்கு இரயில்நிலையத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ஷைன் யோகா பவர் யோகா ஆசிரியர்கள் தனலட்சுமி, சுந்தரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தெற்காசிய விளையாட்டுப் போட்டி: பதக்க பட்டியலில் புதிய சாதனைப் படைத்த இந்தியா!

Intro:தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாப்போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி தங்கப்பதக்கம் வென்றார்
Body:தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாப்போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி தங்கப்பதக்கம் வென்றார்

தூத்துக்குடி

ஆசிய அளவிலான யோகா போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.

ஆசியன் யோகா போட்டிகள் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் வைத்து கடந்த 6ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தை சார்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷைன் யோகா பவர் மாணவர்கள் கனிஷ்கா, கன்னியாகுமரி  ஶ்ரீராம கிருஷ்ண இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி ரிதமிக் யோகா பிரிவில் தங்க பதக்கம் வென்றர்.  ஶ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சஞ்சீவி, அபினேஷ், ஆகியோர் 17வயது மற்றும் 14 வயது பிரிவில் முதலிடம் வகித்து தங்க பதக்கம் வென்றனர். நிரஞ்சன் முத்து வேல் தூத்துக்குடி செயிண்ட்.தாமஸ் அப்போசல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 8ம் வகுப்பு மாணவர் பின் வளைவு பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று வெற்றி வாகை சூடினார்கள்.

இதைத்தொடர்ந்து வெற்றிகோப்பையுடன் சென்னையிலிருந்து முத்துநகர் இரயில் மூலம் தூத்துக்குடி வந்த அவர்களுக்கு இரயில்நிலையத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களுடன் ஷைன் யோகா பவர் யோகா ஆசிரியர்கள் தனலட்சுமி மற்றும் சுந்தரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து தங்கப்பதக்கம் வென்ற கனிஷ்கா கூறுகையில், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஆசியா அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. தங்களை போன்ற பின்தங்கிய மாணவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை அளித்து கௌரவப்படுத்தினால் இன்னும் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு சாதனைகள் படைப்போம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.