ETV Bharat / sports

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி: சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது!

author img

By

Published : Aug 3, 2023, 2:08 PM IST

Men's Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் 7-வது எடிஷன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

asia championship hockey 2023
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி

சென்னை: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-வது எடிசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 03) தொடங்குகிறது. இந்த போட்டியானது வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா (உலக தரவரிசை 4), தென்கொரியா (9), மலேசியா (10), பாகிஸ்தான் (16), ஜப்பன் (19), சீனா (25) என 6 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியில் அனைத்து அணிகளும் ஒரே குருப்பில் இருக்க, ரவுண்ட் ராபின் ஆட்டங்களின் முடிவில், முதல் 4 இடங்களில் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகும்.

இந்திய அணியைப் பொருத்தவரை ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி தொடரில் சிறப்பாக ஆடி, அதே உத்வேகத்துடன் இதில் களம் காண்கிறது. மேலும், செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் வைத்து நடைபெற உள்ளது. இது 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெரும் சுற்றாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் பட்சத்தில், இந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொடக்க நாளான இன்று முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, ஜப்பனை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதனை தொடந்ந்து மாலை 6.15 மணிக்கு 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அடுத்ததாக, 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 25- வது இடத்தில் இருக்கும் சீனாவை சந்திக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கி போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது. 2007ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வென்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம் 16 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு டிக்கெட்களுக்கான விலை ரூ300, ரூ400 என விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளுக்கான டிக்கெட்டை கொண்டு நடக்கும் 3 ஆட்டங்களையும் கண்டு மகிழலாம்.

இதையும் படிங்க: 2023 உலக கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்-14க்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.