ETV Bharat / sports

IPL 2021 : CSK VS KKR - கோப்பை யாருக்கு?

author img

By

Published : Oct 14, 2021, 10:47 PM IST

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், கோப்பையை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கடும் போரில் கோப்பை யாருக்கு?
கடும் போரில் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை இரவு (அக்.14) 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் ஆட்டத்தின் 13 வது சீசனின் இறுதி கட்டத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொள்ள தயாராகி வருகின்றன. 2020 லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு புது உத்வேகத்துடன் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில், தோனி, ஜடேஜா, டூ ப்ளெஸிஸ், ரெய்னா, பிராவோ என மூத்த வீரர்கள் பலர் இருந்தாலும், ருதுராஜ், கெய்க்வாட், ராபின் உத்தப்பா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர்களின் ஆட்டம் கொஞ்சம் முன்னிலை பெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

பல விமர்சனங்களையும் தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு வந்துள்ளது. 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக இறுதி போட்டிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் பயணம், 2021ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதி வரை தொடர்கிறது.

கோப்பை யாருக்கு
கோப்பை யாருக்கு

இதுவரை நடந்த 12 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. 5 முறை கோப்பையை தவற விட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றது. இதுவரை நடந்த போட்டிகளில் 2020ஆம் ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது. மற்ற அனைத்து வருடங்களும் ப்ளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தல தோனி
தல தோனி

இந்த ஆண்டு ஐபிஎல் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா, டூ ப்ளெஸிஸ், கெய்க்வாட் ஆகியோரின் செயல்பாடு நாளை பைனலில் முக்கிய பங்காற்றும் என நம்பலாம்.

கொல்கத்தா அணி
கொல்கத்தா அணி

டெல்லிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், இறுதிப் போட்டியில் ரெய்னா களம் இறங்குவார் என நம்புகின்றனர்.

பல விமர்சனங்கள், பல போராட்டங்களைத் தாண்டி தோனி பலரின் தவறான கணிப்புகளை உடைத்து, பல வெற்றிகளை இந்திய அணிக்கும், சென்னை அணிக்கும்,ரசிகர்களுக்கும் கொடுத்துள்ளார்.

வெல்லப்போவது யாரு?
வெல்லப்போவது யாரு?

பல போட்டிகளில் தோனியின் செயல்பாடுகள் தனது அணிக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் பட்சத்தில், கடந்த 2012 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்விக்கான பழிவாங்கும் செயலாக அமையும்.

அதே சமயம் கொல்கத்தா நைட் ரைடர் அணியின் சிறந்த வீரர்களான சுப்மான் கில், ராகுல் திரிபாதி, சுனில் நரைன், சக்கரவர்த்தி, டிம் சௌத்தி, ஆன்ட்ரே ரசல் போன்ற வீரர்களை சமாளிப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடெர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடெர்ஸ்
இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி

ஏனெனில் கடந்த ஆறு வருடங்களாக இறுதி போட்டிக்கு வராமல் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர் அணி, நாளை நடக்கும் பைனலில் கடைசி வரை போராடும் என நம்பலாம்.

இதுவரை இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதியில் தோற்றதில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: டஃப் கொடுத்த டெல்லிக்கு டாட்டா காட்டிய கேகேஆர்; பைனல் சென்னை vs கொல்கத்தா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.