ETV Bharat / sports

IPL Auction 2024: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள்! மொத்த லிஸ்ட்டும் இங்க இருக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 5:52 PM IST

2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் போனார்.

Etv Bharat
Etv Bharat

துபாய் : 2024ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. ஏலத்தில் உள்நாட்டு வீரர்களை காட்டிலும் வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக மவுசு காணப்பட்டது.

வெளிநாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவதில் அணி உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த முறை அதிக மவுசு இருந்தது. அண்மையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில் அந்த அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் மீது ஒட்டுமொத்த அணி உரிமையாளர்களின் கவனமும் இருந்தது.

இதனால், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஏலம் போனார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சிறப்பை மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றினார். அவருக்கு முன்னதாக, உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய பேட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இதுதான் உச்சபட்ச தொகையா என்று கோரினால், இல்லை, இதற்கு முன்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள அதிக விலைக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏலம் போய் உள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் சாம் கரனை 18 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

அதே ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீனை 17 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், இங்கிலாந்து அதிரடி வீரர் பென் ஸ்டோக்சை 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விலைக்கு வாங்கி இருந்தது. அதன் முன் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரீசை 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

IPL Highest Paid Players List
IPL Highest Paid Players List

கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியது இதுதான் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன நிகழ்வு ஆகும். இதனிடையே கடந்த 2023ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவையும், சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவையும் தல 16 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL Auction 2024 : அதிக விலைக்கு போன் டாப் 5 வீரர்கள்! இந்திய வீரர்களுக்கு வந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.