ETV Bharat / sports

2 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய ராதா யாதவ்; சூப்பர்நோவாஸிற்கு 119 ரன்கள் இலக்கு!

author img

By

Published : Nov 9, 2020, 9:09 PM IST

ஷார்ஜா: சூப்பர்நோவாஸ் அணி வெற்றிபெறுவதற்கு 119 ரன்களை இலக்காக ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

supernovas-need-119-runs-to-win-the-third-women-t20-challenge-cup
supernovas-need-119-runs-to-win-the-third-women-t20-challenge-cup

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இறுதிப்போட்டியில் ட்ரையல்ப்ளேசர்ஸ் - சூப்பர்நோவாஸ் அணிகள் ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணிக்காக கேப்டன் ஸ்மிருதி மந்தனா - டோட்டின் இணை தொடக்கம் கொடுத்தது. கடந்தப் போட்டியில் அனுஜா பாட்டீல் பந்துவீச்சில் ஸ்மிருதி மந்தனா ரன் சேர்ப்பதற்கு கஷ்டப்பட்ட நிலையில், இம்முறையும் ஹர்மன் அதே பாணியை கடைப்பிடித்தார்.

ஸ்மிருதி - டோட்டின்
ஸ்மிருதி - டோட்டின்

அனுஜா வீசிய 2ஆவது ஓவரில் ஸ்மிருதி மந்தனா 4,4,6 என அதிரடி காட்ட, அப்போதே ஸ்மிருதி மந்தனாவின் நாள் என தெரிந்துவிட்டது. பவர் ப்ளே ஓவரில் ஸ்மிருதி அதிரடி காட்ட, 6 ஓவர்களில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 45 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்தும் ஸ்மிருதியின் அதிரடி தொடர்ந்தது.

பின்னர் வந்த பூனம் யாதவ், அனுஜா பாட்டீல் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியின் ஸ்கோர் தடுக்கப்பட்டது. இதனால் டோட்டின் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் பவுண்டரி அடித்து ஸ்மிருதி அரைசதம் கடந்தார்.

அரைசதம் அடித்த கேப்டன் ஸ்மிருதி
அரைசதம் அடித்த கேப்டன் ஸ்மிருதி

15ஆவது ஓவரின்போது சிரிவர்தனே வீசிய பந்தில் ஸ்மிருதி 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் சூப்பர்நோவாஸின் கைகள் ஆட்டத்தில் ஓங்கியது. 16 ஓவரில் முடிவில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 103 ரன்கள் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்று திப்தி ஷர்மா 9, ரிச்சா கோஷ் 10, எல்கெஸ்டோன் 1, ஹர்லின் டியோல் 4, ஜுலன் 1 என வந்த வேகத்தில் வெளியேறினார். இவர்கள் அனைவரும் ராதா யாதவ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் சேத்தது.

இதையும் படிங்க: மும்பை அணியுடன் தாக்குப்பிடிப்பாரா தொடக்க வீரர் ஸ்டோய்னிஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.