ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி.. ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 9:59 AM IST

Ind Vs SA 3rd ODI: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர்களின் இறுதிப் போட்டி, நாளை (டிச.21) தென் ஆப்ரிக்காவின் பார்ல் எனும் பகுதியில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர்களில் பங்கேற்று வருகிறது. முன்னதாக, மூன்று டி20 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில், ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.

அதனை அடுத்து, டிசம்பர் 17ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் தொடங்கியது. அதில், முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 116 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் நேற்று (டிச.19) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியை 211 ரன்களில் சுருட்டிய தென் ஆப்ரிக்க அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி, நாளை (டிச.21) தென் ஆப்பிரிக்காவின் பார்ல் எனும் பகுதியில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலையில் உள்ளது.

இதனால், இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியில் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, டி20 போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் அணியில் இருந்து விலக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயரும் விலக்கப்பட்டு, டெஸ்ட் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார்.

தென் ஆப்பிரக்க அணி வீரர்கள்: டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்

இந்திய அணி வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ரிங்கு சிங், அக்ஸர் பட்டேல், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க: IPL Auction 2024 : ஐபிஎல் தொடரை கலக்கப் போகும் சென்னை அணி! வீரர்கள் முழு லிஸ்ட் இங்கே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.