ETV Bharat / sports

ICC Ranking: இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடத்திற்கு முன்னேற்றம்!

author img

By PTI

Published : Sep 20, 2023, 9:13 PM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.

siraj
siraj

துபாய்: கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை, செப்டம்பர் 17ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தொடரின் இறூதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 50 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆக்கியது. அதன் பின் இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து அசாதாரண வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தேர்வானார். இவர் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கப்பற்றி பல சாதனைகளை படைத்தார். இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 9வது இடத்திலிருந்து ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை!

இவர் 694 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இவர், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.

மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்த தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ், பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘பிசிசிஐ கோல்டன் டிக்கெட்’.. நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.