ETV Bharat / sports

CSK vs MI: தோல்வியில் துவண்ட ஜாம்பவான்கள் மோதல்

author img

By

Published : Apr 21, 2022, 12:55 PM IST

Updated : Apr 21, 2022, 1:36 PM IST

IPL 2022 Match 33 CSK vs MI Chennai Super Kings vs Mumbai Indians
IPL 2022 Match 33 CSK vs MI Chennai Super Kings vs Mumbai Indians

ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை: ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (ஏப். 21) 7:30 மணிக்கு டிஓய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை தழுவின. மும்பை அணி 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது.

சென்னை அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில், புள்ளிப்பட்டியலில் மும்பை 10ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9ஆவது இடத்திலும் உள்ளது. இரண்டு அணிகளும் பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெறுமா என்னும் கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று மோதுகின்றன. இதனால் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் போட்டியை காண ஆர்வமாக உள்ளனர். இரு அணிகளின் உத்தேச பட்டியல் பின்வருமாறு.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, எம்எஸ் தோனி (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன்(கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, ரிலே மெரிடித்.

இதையும் படிங்க: IPL 2022: 10 ஓவரில் ஆட்டத்தை முடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Last Updated :Apr 21, 2022, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.