ETV Bharat / sports

IPL 2022: 10 ஓவரில் ஆட்டத்தை முடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

author img

By

Published : Apr 21, 2022, 7:43 AM IST

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவரில் வெற்றிகரமாக முடித்தது.

david warner
david warner

மும்பை: பஞ்சாப்- டெல்லி அணிகள் மோதிய ஏப்.20ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

பஞ்சாப்-டெல்லி மோதல்: ஐபிஎல் போட்டியின் நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. மும்பை பிரபோர்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ரன்னும், ஓப்பனர் மயங்க் அகர்வால் 24 ரன்னும், ஷாருக் கான் 12 ரன்னும், ராகுல் சாஹர் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.

வார்னர் அதிரடி: மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலும் சுழியத்திலும் அவுட் ஆகி நடையை கட்டினார்கள். டெல்லி தரப்பில் கலீல் அஹமது, லலித் யாதவ், அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், முஸ்தாபிசூர் ரகுமான் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

இந்த நிலையில் 116 ரன்கள் இலக்கை 10.3 ஓவரில் டெல்லி எட்டிப் பிடித்தது. அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் 30 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார்.

10 ஓவரில் முடிந்த ஆட்டம்: மற்றொரு ஓப்பனரான பிரித்திவி ஷா 20 பந்துகளில் 41 ரன்கள் (7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) குவித்து, ராகுல் சஹார் பந்துவீச்சில் நாதன் எல்லீஸிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

IPL 2022: DC beat Punjab by 9 wickets
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் கொண்டாட்டம்

சர்பரஸ் கான் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இதனால் டெல்லி 10.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் கிங்ஸ்-ஐ துரத்தியது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.