ETV Bharat / sports

SRH vs LSG: மீண்டு வருமா எஸ்ஆர்ஹெச்; லக்னோவுடன் மோதல்

author img

By

Published : Apr 4, 2022, 10:56 AM IST

Updated : Apr 5, 2022, 10:31 AM IST

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி, நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

SRH vs LSG
SRH vs LSG

நவி மும்பை: 15ஆவது ஐபிஎல் தொடர், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. புதிதாக குஜராத், லக்னோ ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

கேன் vs கே.எல்: இந்த தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 12ஆவது லீக் போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

மிரட்டும் லைன்-அப்: லக்னோ அணி, முதல் போட்டியில் குஜராத் அணியிடம் படுதோல்வியடைந்த பின்னர், சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அசத்தலாக விளையாடி தனது முதல் வெற்றியை ருசித்தது. பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட்டாக கருதப்படும் டி காக் அதிரடி பங்களிப்பு என்பது லக்னோவிற்கு மிக தேவையான ஒன்று. மற்றொரு ஓப்பனர் ராகுல் பொறுமையான யுக்தியை பின்பற்றுவது டி காக்கிற்கு மட்டுமில்லாமல் அணிக்கும் பக்கபலமாக இரு்ககும். மிடில்-ஆட்ரடரை பொறுத்தவரை எவின் லீவிஸ், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, டவுண் தி ஆட்ரடரில் ஆயுஷ் பதானி, குர்னால் பாண்டியா என மிரட்டலாக உள்ளது.

பேப்பரில் மட்டும்தான் பலமா?: இதேபோன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், வில்லியம்சன், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் என பெயரளவில் பலமாக உள்ளது. ஆனால், கடந்த போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சில் இதே பேட்டிங் வரிசைதான் சீட்டுக்கட்டாக சரிந்தது. எனவே, இவர்கள் இன்றைய ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ரோமாரியோ ஷெப்பேர்டு, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் பேட்டிங்கிற்கும் பலம் சேர்க்கின்றனர்.

பலம்பெருமா லக்னோ பவுலிங்: பந்துவீச்சை பொறுத்தவரை லக்னோவிற்கு இறுதிக்கட்ட ஓவர்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மார்க் வுட் விலகிய பின் அணியில் இணைந்த ஆண்ட்ரூ டை கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். எனவே அணயின் பந்துவீச்சு முன்னேற்றத்தை கண்டுள்ளது. பனிப்பொழிவு அதிகம் இருக்கும் காரணத்தால் விரல் சுழற்பந்துவீச்சாளர் என்ற முறையில் ஷாபாஸ் நதீம் அணியில் இடம் பிடிப்பது கடினம்தான். எனவே, பீஷ்னாய் - குர்னால் ஜோடி சுழற்பந்துவீச்சை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை பெற்றுள்ளது. சமீரா - ஆவேஷ் கான் - டை ஆகியோரையே வேகப்பந்துவீச்சில் முழுவதுமாக நம்பியுள்ளது.

ஹைதராபாத் தரப்பில் கடந்த போட்டியில் மோசமான பந்துவீச்சால் ராஜஸ்தான் 210 ரன்களை குவித்தது. எனவே, பலம் வாய்ந்த லக்னோ பேட்டிங்கை புவி - நடராஜன் - உம்ரான் மாலிக் ஆகியோர் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். லக்னோவின் ஆடும் லெவனில் பெரிதாக மாற்றம் இரு்கக வாய்ப்பில்லை.

பிளேயிங் XI

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (கே), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம், அப்துல் சமத், ரோமாரியோ ஷெப்பேர்டு, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: கே.எல். ராகுல் (கே), குவின்டன் டி காக், மனீஷ் பாண்டே, எவின் லீவிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதானி, குர்னால் பாண்டியா, ரவி பீஷ்னாய், துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ஆண்ட்ரூ டை.

இதையும் படிங்க: சிவம் துபே அதிரடி வீண்... சிஎஸ்கே மீண்டும் தோல்வி!

Last Updated : Apr 5, 2022, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.