ETV Bharat / sports

'வெறித்தனம்.. வெறித்தனம்..' வைரலாகும் சிஎஸ்கே ரசிகர்களின் கொண்டாட்டங்கள் வீடியோஸ்!

author img

By

Published : May 30, 2023, 3:38 PM IST

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்ற நிலையில், ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

csk Fans
சிஎஸ்கே ரசிகர்கள்

ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. நள்ளிரவு 2 மணி வரை ஆட்டம் நடைபெற்றதால், தூக்கத்தை பொருட்படுத்தாத ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகமதாபாத் மைதானத்தில் பெரும்பாலும் சென்னை ரசிகர்களே திரண்டிருந்த நிலையில், சிலர் உணர்ச்சி மிகுதியில் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். போட்டி நடைபெற்ற அகமதாபாத் மட்டுமின்றி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளி பெரு நகரங்களில் வீதியில் திரண்ட ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். சென்னையில் முக்கிய வீதிகளில், ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நள்ளிரவிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தால், உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில், தொலைக்காட்சியில் ஐபிஎல் பைனல் போட்டியை கண்டுரசித்த ரசிகர்கள், சென்னை அணியின் வெற்றியை கொண்டாடினர். ஜடேஜா 4 ரன்கள் அடித்து வெற்றி தேடி தந்ததை கண்ட ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தோனி... தோனி..., ஜடு... ஜடு... என உற்சாக குரல் எழுப்பி மகிழ்ந்தனர்.

இதுமட்டுமின்றி சில ரசிகர்கள் வெறித்தனமான உணர்வுடன் வெற்றியை கொண்டாடினர். சென்னை அணி வெற்றி பெற்றதும் உற்சாக மிகுதியில் இருந்த ரசிகர் ஒருவர், தன்னிலையை மறந்து அறையின் கதவை ஓங்கி அடித்து அலறினார். அவரை சக நண்பர்கள், ஆசுவாசப்படுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மற்றொரு ரசிகர் ஒருவர், தொலைக்காட்சியின் முன் நின்று கொண்டு “ஓம் சக்தி... சமயபுரத்து மகமாயி... ஒரு பந்தில் ஜெயிக்க வேண்டும்... இது தோனியின் கடைசி போட்டி தாயே” என்று கூறி வழிபட்டார். அந்த நேரத்தில் ஜடேஜா பவுண்டரியை விளாசி வெற்றியை உறுதி செய்ய, அலறியபடி வெற்றியை கொண்டாடினார் அந்த ரசிகர்.

  • ஓம் சக்தி. சமயபுரத்து மகமாயி... ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா 😂🤣@ChennaiIPL pic.twitter.com/ilsJLIxLvk

    — 🕊வேட்டைக்காரன்🏇࿐ (@Vettaikaran_M) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மூதாட்டி ஒருவர் சென்னை அணியின் வெற்றியை கொண்டாடும் காட்சிகளும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சென்னை அணி வெற்றி பெற்றதும் கைத்தட்டி மகிழ்ந்த அவர், "ரவீந்திர ஜடேஜாவை தூக்குங்கடா எல்லாரும்" என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதேபோல் டிவிட்டர், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும், சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரைபிரலங்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் சென்னை அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: MS Dhoni retirement: ஐபிஎல் ஓய்வு குறித்து பேசிய தோனி.. அதிலும் ஒரு ட்விஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.