ETV Bharat / sports

ஐபிஎல் 2022... புதிய கேப்டன்கள்... சென்னை vs கொல்கத்தா...

author img

By

Published : Mar 26, 2022, 7:56 AM IST

ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் இன்று தொடங்குகிறது. இரண்டு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ipl-2022-chennai-vs-kolkata
ipl-2022-chennai-vs-kolkata

ஐபிஎல் 15ஆவது சீசன் இன்று (மார்ச் 26) தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடக்கிறது. நான்கு பிளேஆஃப் உள்பட மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்த போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் மட்டும் நடக்கின்றன. மும்பை வான்கடே, டிஒய் படில் மைதானங்களில் தலா 20 ஆட்டங்களும், பிராபோர்ன் மற்றும் புனேவின் எம்சிஏ மைதானங்களில் தலா 15 ஆட்டங்களும் நடக்கின்றன. புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு அணிகள் உள்பட 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏவில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் குரூப் பியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டு இறுதி ஆட்டக்காரர்கள்: ஐபிஎல் 2021ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. சென்னை அணி 27 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அப்போது சென்னை அணிக்கு தோனியும், கொல்கத்தா அணிக்கு இயோன் மோர்கனும் கேப்டன்களாக இருந்தனர். இந்த சீசனில் இரண்டு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் பொறுப்பேற்றுள்ளனர். சென்னை அணிக்கு ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணியை பொறுத்தரவை பேட்டிங் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தோனி போன்ற முக்கிய வீரர்கள் உள்ளனர். அதேபோல பந்துவீச்சில் மொயீன் அலி, மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா ஆகியோருடன் ஆல்ரவுண்டர்களாக சிவம் துபே, கிறிஸ் ஜோர்டான் இருக்கின்றனர். தீபக் சாஹர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளது அணிக்கு சற்று பின்னடைவை தரலாம்.

மறுபுறம் கொல்கத்தா அணியில் பேட்டிங் வரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடஷ் ஐயர், ரஹானே, நிதிஷ் ராணா உடன் ஆல்ரவுடர்களான சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருக்கின்றனர். பந்தூவீச்சில் சுனில் நரேன், பாட் கம்மிங்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், சவுத்தி உள்ளனர். ஆனால் விக்கெட் கீப்பிங்,பேட்டிங் வீரர்களில் சென்னையை போல் அல்லாமல் கொல்லகத்தா உள்ளது சற்று பின்னடைவே.

உத்தேச வீரர்கள் பட்டியல்: சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் ஆடம் மில்னே. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், டிம் சவுத்தி, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி.

இதையும் படிங்க: ஐபிஎல் மெகா ஏலம் 2022: எத்தனை வீரர்கள்... எத்தனை கோடிகள்... A to Z தகவல்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.