ETV Bharat / sports

ஐபிஎல் 2020: சஹால் சுழலில் பெங்களூரு அசத்தல் வெற்றி!

author img

By

Published : Sep 21, 2020, 11:49 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது.

RCB Vs SRH match update
RCB Vs SRH match update

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இத்தொடரில் இன்று (செப். 21) நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிகல், தனது அறிமுக போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து வந்த ஏபிடி வில்லியர்சும், தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து அசத்தினார்.

பந்தை சிக்சருக்கு விளாசிய ஏபிடி வில்லியர்ஸ்
பந்தை சிக்சருக்கு விளாசிய ஏபிடி வில்லியர்ஸ்

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 51 ரன்களையும், படிகல் 56 ரன்களையும் சேர்ந்தனர்.

அதிரடியில் மிரட்டிய படிகல்
அதிரடியில் மிரட்டிய படிகல்

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் டேவிட் வார்னர் 6 ரன்களில் எதிர்பாரதவிதமாக விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

அரைசதமடித்த பேர்ஸ்டோவ்
அரை சதமடித்த பேர்ஸ்டோவ்

இதையடுத்து பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மனீஷ் பாண்டே விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

விக்கெட் வீழ்திய மகிழ்ச்சியில் யுஸ்வேந்திர சஹால்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் யுஸ்வேந்திர சஹால்

தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த பேர்ஸ்டோவ் அரை சதமடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடி வந்த அவர், 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சஹால் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அதன் பிறகு வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

மனீஷ் பாண்டே
மனீஷ் பாண்டே

இதனால் 19.4 ஓவர்களிலேயா அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு அணியில் சிறப்பாக பந்து வீசிய சஹால், 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க:பதற்றத்தை விடவும் உற்சாகமாக இருந்தேன்: இளம் வீரர் ரவி பிஷ்னோய்!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.