ETV Bharat / sports

பிளே ஆஃப் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி!

author img

By

Published : Oct 21, 2020, 3:48 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 21) நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: RCB face rejuvenated KKR in return fixture
IPL 2020: RCB face rejuvenated KKR in return fixture

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. தொடர் மீதான எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி, இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடத்தில் உள்ள இரு அணிகள் மோதவுள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில் பங்கேற்ற ஒன்பது லீக் போட்டிகளில், ஆறு வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி, ஏறத்தாள பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

டி வில்லியர்ஸ்
டி வில்லியர்ஸ்

ஆரோன் ஃபிஞ்ச், டி வில்லியர்ஸ், விராட் கோலி, படிகல் என அதிரடி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதினால், இன்றைய போட்டியிலும் அவர்களின் அதிரடி ஆட்டம் தொடரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரின் சமீபத்திய ஃபார்ம், நிச்சயம் எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சீசனில் ஒன்பது போட்டிகளில் பங்கேற்று, ஐந்து வெற்றி, நான்கு தோல்வி என புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மன் கில், திரிபாதி, மோர்கன், ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளது அணிக்கு பலத்தைக் கூட்டுகிறது. பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், எதிரணிக்கு நெருக்கடியை கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

முன்னதாக, ஹைதராபாத் அணிகெதிரான போட்டியில் ஃபர்குசனின் அசத்தலான பந்துவீச்சால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அதே சுவாரஸ்யம் இருக்கும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஃபர்குசன்
ஃபர்குசன்

மேலும் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய சுனில் நரைன், மீண்டும் பந்துவீச ஐபிஎல் பந்துவீச்சு சோதனைக் குழு அனுமதியளித்துள்ளதால், இன்றைய ஆட்டத்தில் நரைன் அணியில் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

உத்தேச அணி:

கேகேஆர்: சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதிஷ் ராணா, ரஸ்ஸல்/ நரைன், கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஃபர்குசன், சிவம் மாவி.

ஆர்சிபி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், குர்கீரத் மான் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹ்மத், இசுரு உதனா, நவ்தீப் சைனி,யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க: தோனி பிஸ்தாவா இருக்கலாம், ஆனா அவர் சொல்ற எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது - ஸ்ரீகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.