ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்!

author img

By

Published : Oct 17, 2020, 3:03 PM IST

பெங்களூரு - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

IPL 2020: RCB eye return to winning ways against RR
IPL 2020: RCB eye return to winning ways against RR

விறுவிறுப்புக்குத் துளியும் பஞ்சமின்றி ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் களைகட்டியுள்ளன. இதில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், ஷிவம் தூபே, குர்கீரத் மான் சிங், வாஷிங்டன் சுந்தர், இசுரு உதனா, நவ்தீப் சைனி,யுஸ்வேந்திர சஹால்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கட்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : விக்கெட்டில் அரைசதம் அடித்த ட்ரெண்ட் போல்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.