ETV Bharat / sports

ஐபிஎல் 2020: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பஞ்சாப்?

author img

By

Published : Oct 15, 2020, 3:50 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: KXIP aim to break losing streak against RCB
IPL 2020: KXIP aim to break losing streak against RCB

ரசிகர்கள் பெரும் அதரவுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. கெய்ல், டி வில்லியர்ஸ், ஃபிஞ்ச், ராகுல் என நட்சத்திர வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த சீசனில் தொடர் தொல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இதனால் இன்றைய ஆட்டத்தில் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் களமிறங்கவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அணியின் நடுநிலை வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

கே.எல்.ரகுல் - மயங்க் அகர்வால்
கே.எல்.ரகுல் - மயங்க் அகர்வால்

பந்துவீச்சு தரப்பில் ஷமி, ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அணிக்கு வழங்கி வருகின்றனர். இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி தலைமையிலன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில் பங்கேற்ற ஏழு லீக் போட்டிகளில், ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆரோன் ஃபிஞ்ச், டி வில்லியர்ஸ், விராட் கோலி, படிகல் என அதிரடி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதினால், இன்றைய போட்டியிலும் அவர்களில் அதிரடி ஆட்டம் தொடரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றன.

ஏபிடி வில்லியர்ஸ்
ஏபிடி வில்லியர்ஸ்

பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரின் சமீபத்திய ஃபார்ம், நிச்சயம் எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று, தங்கள் வெற்றிப்பாதையை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உத்தேச அணி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வல், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், சர்ப்ராஸ் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷ்னோய்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், இசுரு உதனா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.