ETV Bharat / sports

இரண்டாவது வெற்றிக்கு மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

author img

By

Published : Sep 25, 2020, 4:44 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஏழாவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: CSK aim to regain winning momentum vs DC
IPL 2020: CSK aim to regain winning momentum vs DC

கோவிட் - 19 நெருக்கடிக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.25) நடைபெறவுள்ள 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அதிகப்படியான இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணியும், அதிக அனுபவம் நிறைந்த வீரர்களைக் கொண்ட சென்னை அணியும் இந்த சீசனில் முதல் முறையாக மோதவுள்ளதால், இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சீசனின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி, இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் கடும் விமர்சனங்களைச் சந்திந்தது. அதிலும் தோனி களமிறங்கிய வரிசையை மையமாக வைத்தே அனைத்து விமர்சனங்களும் எழுப்பப்பட்டன.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

அதேசமயம் இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய பட்சத்தில், இன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியுடனான போட்டியின் போது சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். அதிலும் பியுஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி ஆகியோரின் பந்துவீச்சுகளில் சிக்சர் மழை பொழிந்தது. இதனால் இன்றைய போட்டியில் அவர்களுக்கு மாற்றாக ஜோஷ் ஹெசில்வுட், கரன் சர்மா இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம் கர்ரன்
சாம் கர்ரன்

இளம் வீரர் சாம் கர்ரன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தனது பணியை சரியாகவே செய்துவருகிறார். அதேசமயம் டூ பிளேசிஸும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். டெல்லி அணியுடனான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றியை ஈட்டுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாப் டூ பிளேசிஸ்
பாப் டூ பிளேசிஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

சீசனின் முதல் போட்டியையே சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்ற டெல்லி அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிக இளம் வீரர்களை கொண்டுள்ள டெல்லி அணியில், அஸ்வின், தவான், ரபாடா, ஸ்டோய்னிஸ் என அனுப வீரர்களையும் கொண்டு இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது.

மார்கஸ் ஸ்டோய்னிஸ்
மார்கஸ் ஸ்டோய்னிஸ்

பஞ்சாப் அணியுடனான முதல் போட்டியில் காயம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் பாதியிலேயே விலகினார். அதிலும் அவர் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள அஸ்வின், இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கெட்டை கைபற்றிய மகிழ்ச்சியில் ரவி அஸ்வின்
விக்கெட்டை கைபற்றிய மகிழ்ச்சியில் அஸ்வின்

அதேசமயம் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட்டிங்கில் அரை சதமடித்தும், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் அணியின் வெற்றிக்கு உதவினார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவும், சூப்பர் ஓவரில் தனது பணியைச் சிறப்பாக செய்தார்.

ரபாடா - ஸ்டோய்னிஸ்
ரபாடா - ஸ்டோய்னிஸ்

முதல் வெற்றியைப் பதிவு செய்த உற்சாகத்திலுள்ள டெல்லி அணி, இன்றைய போட்டியில் வலிமையான சென்னை அணியை சமாளிக்குமா என்பது இன்றைய போட்டியின் முடிவில் தெரியவரும்.

நேருக்கு நேர்:

சென்னை, டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முறையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் கடந்த சீசனில் சென்னை அணியுடனான லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றுகளில் டெல்லி அணி தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

மைதானம்:

இன்றைய போட்டி நடைபெறவுள்ள துபாய் சர்வதேச மைதானமானது பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த சீசனில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாய் சர்வதேச மைதானம்
துபாய் சர்வதேச மைதானம்

உத்தேச அணி:

சிஎஸ்கே: முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டூ பிளேசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா/ கரன் சர்மா, லுங்கி இங்கிடி/ ஜோஷ் ஹசில்வுட்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா/ ஆவேஷ் கான், ககிசோ ரபாடா.

இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் வரலாற்றின் புதிய தொடக்கம்! - #T20WorldCup2007Rewind

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.