ETV Bharat / sports

ஐபிஎல் 2020: விக்கெட்டில் சதமடித்த சந்தீப்!

author img

By

Published : Oct 25, 2020, 5:47 PM IST

ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா படைத்துள்ளார்.

IPL 13: Sandeep Sharma becomes 6th Indian pacer to achieve this milestone
IPL 13: Sandeep Sharma becomes 6th Indian pacer to achieve this milestone

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த சந்தீப் சர்மா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

27 வயதான சந்தீப் சர்மா ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக 87 போட்டிகளில் பங்கேற்று, 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிளே ஆஃப் சுற்றுக்கு போராடும் ராஜஸ்தான்; புள்ளிப்பட்டியலில் போட்டியிடும் மும்பை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.