ETV Bharat / sports

டாஸ் வென்ற டெல்லி... பேட்டிங்கைத் தேர்வு செய்த ஸ்ரேயாஸ் ஐயர்...!

author img

By

Published : Nov 8, 2020, 7:30 PM IST

ஹைதராபாத் அணிக்கு எதிரான 2ஆவது குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

delhi-capitals-opt-to-bat-against-hyderabad
delhi-capitals-opt-to-bat-against-hyderabad

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் ஆடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

டெல்லி அணி விவரம்: ரஹானே, தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஸ்டோய்னிஸ், ஹெட்மயர், பிரவின் தூபே, ரபாடா, நார்கியே, அஸ்வின், அக்சர் படேல்.

ஹைதராபாத் அணி விவரம்: வார்னர் (கேப்டன்), ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, மனீஷ் பாண்டே, வில்லியம்சன், ப்ரியன் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், நதீம், சந்தீப் ஷர்மா, நடராஜன்.

இதையும் படிங்க: எங்களால் நிச்சயம் ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும்: ஸ்டோய்னிஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.