ETV Bharat / sports

பெங்களூரு அணிக்கு நான்காவது தோல்வி; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான்!

author img

By

Published : Apr 2, 2019, 11:46 PM IST

ஜெய்ப்பூர் : பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

rr


இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் -பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஒவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 67 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரஹானே - பட்லர் இணை அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், ரஹானே 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

batlar
பட்லர்

பின்னர் பட்லர் - ஸ்மித் இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை அட்டகாசமாக எதிர்த்து ஆடியது. 12-வது ஓவரை மொயின் அலி வீசியபோது, பட்லர் ஐபிஎல் தனது ஏழாவது அரைசதத்தை பதிவு செய்தார். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிய பட்லர் 43 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, திரிபாதி களமிறங்கினார்.

திரிபாதி- ஸ்மித் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்டது.

steve
ஸ்டீவ் ஸ்மித்

சிராஜ் வீசிய 17-வது ஓவரில் ராஜஸ்தான் அணி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்களை எடுக்க, 18 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. 18-வது ஓவரில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. இதையடுத்து 19-வது ஓவரில் ஸ்மித் 38 ரன்களில் ஆட்டமிழக்க , கடைசி 6 பந்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

பின்னர் ஸ்டோக்ஸ் களமிறங்க, முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்க, ஐந்தாவது பந்தில் சிக்ஸர் அடித்து திரிபாதி ராஜஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் திரிபாதி 34 ரன்கள் எடுத்தார்.

Intro:Body:

IPL - RR vs RCB result


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.