ETV Bharat / sports

ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்புமா கொல்கத்தா?

author img

By

Published : Apr 25, 2019, 12:34 PM IST

கொல்கத்தா: இன்றைய ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்த்து ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

ராணா

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் தொடரின் தொடக்கத்தில் ஆடிய 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வெற்றிபெற்று கெத்து காட்டியது.

இந்நிலையில், அடுத்ததாக நடைபெற்ற 5 போட்டிகளில் அனைத்திலும் தோல்வியடைந்து திணறி வருகிறது. கொல்கத்தா பேட்ஸ்மேன்களான ராணா, லின், ரஸல், நரைன், கில் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் நிலையில், கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டம் அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இதனை சரிசெய்வார் என எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் ரஹானே, ஸ்மித், சஞ்சு சாம்சன், ஆர்ச்சர், குல்கர்னி ஆகியோர் தற்போது சிறப்பான ஃபார்மிற்கு வந்துள்ளதால் ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொல்கத்தா
ஸ்டீவ் ஸ்மித்

இன்றையப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதால், டாஸ் முக்கிய ஒன்றாக கருதப்படும். இந்த மைதானம் ரன்னுக்கு ஏற்றதாய் இருக்கும். அதனால், இன்று ரன் வேட்டைக்கு பஞ்சமிருக்காது என்றே சொல்லலாம். எனவே இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களும், கேப்டன் ஸ்மித்தும் ரஸலைக் கட்டுபடுத்தத் தவறினால் ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியில் மீண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவே. ரஸலுக்கு எதிரான சிறந்த திட்டத்துடன் ராஜஸ்தான் அணியினர் களமிறங்க வேண்டும்.

கொல்கத்தா
ரஸல் - ராணா

இதுவரை இந்த இரு அணிகளும் ஆடிய 19 போட்டிகளில் 10 ஆட்டங்களில் கொல்கத்தா அணியும், 9 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வென்றுள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.