ETV Bharat / sports

மும்பைக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் சென்னை!

author img

By

Published : Apr 26, 2019, 9:25 AM IST

சென்னை: இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.

சென்னை

இன்றையப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்த்து ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகள் மோதிய கடைசிப் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளதால், இந்த ஆட்டத்தில் மும்பைக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் வழக்கம்போல் கேப்டன் தோனியின் ஆட்டம் ஒவ்வொரு போட்டிக்கும் விஸ்வரூபமாய் மாறிவருகிறது. கடந்தப் போட்டியில் வாட்சன் அதிரடியாக ஆடி தனது ஃபார்மை நிரூபித்துள்ளதால் சென்னை அணியின் தொடக்க வீரர்களின் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. டு பிளசிஸ், வாட்சன், ரெய்னா, தோனி, ஜாதவ் ஆகியோர் சிறப்பாக ஆடிவருவதால் சென்னை அணி சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தும் என்பது நிச்சயம்.

வாட்சன்
மும்பை

மும்பை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் டி காக், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோரை நம்பியே ஆட வருகிறது. கேப்டன் ரோகித் ஷர்மா, பென் கட்டிங், குருணல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஃபார்மிற்கு வருவது மும்பை அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும்.

வாட்சன்
ஹர்திக் பாண்டியா

சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சென்னை அணியின் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோர் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பர். மும்பை அணியில் ராகுல் சாஹர், மயங்க் மார்கண்டே உள்ளிட்டோர் சென்னை அணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்சன்
வாட்சன்

இரு அணிகளுக்கும் இடையே ரிவல்ரி உள்ளதால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கிடையே விளையாடிய 25 போட்டிகளில் 11 ஆட்டங்களில் சென்னை அணியும், 14 ஆட்டங்களில் மும்பை அணியும் வெற்றிபெற்றுள்ளதால் இந்தப் போட்டியில் யார் வெல்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Intro:Body:

CSK vs MI - Preview


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.