ETV Bharat / sports

அயர்லாந்துக்கு எதிரான டி-20 தொடர்! பிளேயிங் 11ல் யார் யாருக்கு வாய்ப்பு?

author img

By

Published : Jun 25, 2022, 1:12 PM IST

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி , அயர்லாந்து சுற்றுப்பயனம் மேற்கொண்டு 2 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. நாளை முதல் போட்டி நடைபெறும் நிலையில் பிளேயிங் 11ல் யார் யார் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்..

IND VS IRE T20 Match Preview
IND VS IRE T20 Match Preview

ரோகித் சர்மா தலைமையிலான சீனியர் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி , இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகி வரும் நிலையில் , ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டி-20 போட்டி நாளை மலாஹிட் நகரில் நடைபெறுகிறது, இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 உலக கோப்பைக்கு அணியை தயாராக்கவும் , சரியான வீரர்களை தேர்வு செய்யும் நோக்கிலும் பிசிசிஐ உள்ளது.

அதனால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது சந்தேகம் தான். தென் ஆப்பிரிககாவுக்கு எதிரான தொடரில் களமிறங்கிய அணியில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு பிளேயிங் 11ல் தேர்வு செய்யப்பட உள்ளது.

அணி விவரம் : ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்) , புவனேஸ்வர் குமார் ( துணை கேப்டன் ), ரிதுராஜ் கேக்வாத் , இஷான் கிஷன் , வெங்கடேஷ் ஐயர் , சூர்யகுமார் யாதவ் , ராகுல் திரிபாதி , சஞ்சு சாம்ஸன் , தீபக் ஹூடா , தினேஷ் கார்த்திக் , அக்‌ஷர் பட்டேல் , ஹர்ஷல் பட்டேல் , ஆவேஷ் கான் , ரவி பிஷ்னோய் , யுஸ்வேந்திர சாஹல் , அர்ஷ்தீப் சிங் , உம்ரான் மாலிக்..

இதில் ஹர்திக் பாண்ட்யா , புவனேஸ்வர் குமார் , இஷான் கிஷன் , சூர்யகுமார் யாதவ் , தினேஷ் கார்த்திக் , யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் விளையாடுவது உறுதி.. மற்ற வீரர்கள் அணியின் தேவைக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அயர்லாந்து கத்துக்குட்டி அணி என்பதால் , தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு அளிக்கப்படாத அர்ஷ்தீப் சிங் , உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.. வெங்கடேஷ் ஐயர் , தீபக் ஹூடா ஆகியோருக்கு 2ல் ஒரு போட்டியிட விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

பிளேயிங் 11 : இஷான் கிஷன் , ரிதுராஜ் கேக்வாத் , சூர்யகுமார் யாதவ் , சஞ்சு சாம்ஸன் , தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா , தினேஷ் கார்த்திக் , புவனேஷ்வர் குமார் , யுஸ்வேந்திர சாஹல் , உம்ரான் மாலிக் , அர்ஷ்தீப் சிங்....

முன்னாள் இந்திய வீரர் லட்சுண் இந்த அணிக்கு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.