ETV Bharat / sports

IND vs SA : இந்தியாவின் வெற்றி வேட்கை தொடருமா? தென் ஆப்பிரிக்காவுடன் முதலாவது டி20 கிரிக்கெட்டில் மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 6:00 AM IST

Updated : Dec 10, 2023, 8:09 AM IST

IND vs SA 1st T20I : இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று இரவு நடைபெறுகிறது.

Etv Bharat
Etv Bharat

டர்பன் : தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 10) டர்பனில், இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-க்கு 1 என்ற கணக்கில் வென்று வீறுநடைபோட்டு வருகிறது. அதேநேரம் இந்த வீறுநடை தென் ஆப்பிரிக்கா மண்ணில் கைகொடுக்குமா என்றால் கேள்விக் குறி தான். தென் ஆப்பிரிக்க தனது சொந்த மண்ணில் பலம் வாய்ந்து காணப்படும்.

தென் ஆப்பிரிக்க மைதானங்கள், அங்கு நிலவும் கால சூழ்நிலை மற்றும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப இசைந்து கொடுத்து இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டும் கடும் நெருக்கடி கொடுக்க முடியும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 223 ரன்கள் குவித்து 55 புள்ளி 75 சராசரியாக கொண்டு ஜொலித்த நட்சத்திர நாயகன் ருதுராஜ் கெய்க்வாட், தென் ஆப்பிரிக்க தொடரிலும் ஜொலிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக செயல்பட்ட் சூர்யகுமார் யாதவிற்கு, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த முறையின் இந்தியாவின் இளம் படையே தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள காத்திருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை நன்றாக இருந்தாலும், தென் ஆப்பிரிக்க சூழலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை ஆஸ்திரேலிய தொடரில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ரவி பிஷ்னாய், அக்சர் படேல் உள்ளிட்டோர் தென் ஆப்பிரிக்காவில் எதிரான ஆட்டங்களில் திறம்பட செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசையை சீர்குலைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசிய உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-க்கும் 0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டெம்பா பவுமா கேப்டன்சியும், பேட்டிங்கும் விமர்சத்திற்குள்ளான நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமா டெஸ்ட் தொடருக்கு மட்டுமே கேப்டனாக பொறுப்பு வகிப்பார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டர்பன் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், முகேஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், திலக் வாரிக்வாட் , குல்தீப் யாதவ்.

தென் ஆப்பிரிக்கா : எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், ஜெரால்ட் கோட்ஸி, நான்ட்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி, ஒட்னியல் பார்ட்மேன், டான் மார்கோ ஜான்சென்ரியா, மார்கோ ஜான்ஸென்ரே.

இதையும் படிங்க : முன்னாள் கால்பந்து வீரர் ஓலே குன்னர் சோல்ஸ்கேர் இந்தியச் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு..!

Last Updated : Dec 10, 2023, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.