ETV Bharat / sports

அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக அஸ்வின் தேர்வானது எப்படி? - பிசிசிஐ அதிகாரியின் சிறப்பு பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 10:40 PM IST

ETV Bharat Exclusive on Ashwin selection for ICC world cup series: ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து, ஈடிவி பாரத்தின் சஞ்சீப் குகா வழங்கிய பிரத்தியேக செய்தி.

Etv Bharat
Etv Bharat

மேற்கு வங்கம் (கொல்கத்தா): சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து, ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியில், மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக செம்படம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர்களாக ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவிற்கு பிறகு மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக அக்ஸர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் அக்ஸர் பட்டேல் காயத்தில் இருந்து மீண்டு வர மேலும், நான்கு முதல் ஐந்து வாரங்கள் ஆகும் என கூறப்பட்டது.

இது குறித்து பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் ஈடிவி பாரத்திடம் கூறும்போது, "ரவிச்சந்திரன் அஸ்வினைத் தவிர எங்களுக்கு வேறு யாரையும் தேர்வு செய்வதாக தெரியவில்லை. ஏனெனில், அவர் பல அணிகளுடன் விளையாடிய ஒரு அனுபவமிக்க சிறந்த வீரராக இருக்கிறார்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அஸ்வினை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு அஸ்வின் உலகக் கோப்பை தொடர் போட்டிகள் விளையாடும் அளவுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள கால அவகாசம் கேட்டதாகவும், அதன் பின்னரே அஸ்வின் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிசிசிஐ அதிகாரி, தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணி, ஒரு ஆஃப் ஸ்பின்னர், ஒரு இடது கை சுழல் பந்து வீச்சாளர் மற்றும் நான்கு வேகப்பந்து வீச்சாளர் என உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணி முழுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அக்ஸர் பட்டேலை குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி, அக்ஸர் பட்டேலின் களத்தில் இறங்கிய உடன் பந்தை எதிர்கொள்ளும் திறன், பீல்டிங் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான், அவரை முன்னதாக தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள் என கூறினார்.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டிகளில், இந்தியாவின் முதல் போட்டியானது, ஐந்து முறை சாம்பியன்களான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஐசிசி போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி , முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிங்க: "உலகக் கோப்பை அணியில் சாஹலை தேர்வு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" - யுவராஜ் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.