ETV Bharat / sports

India vs Australia: இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு? என்ன சொல்கிறது வானிலை?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 6:01 AM IST

World cup Cricket 2023 : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில், ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு!

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நாளை (அக்டோபர் 08) சென்னையில் மோதுகிறது. இந்த ஆட்டமானது இந்திய நேரப்படி, மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை விலையாடுவதால் இதனை காண்பதற்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் சென்னை நோக்கி படை எடுத்துள்ளனர். தற்போது சென்னையில் அவ்வப்போது லேசான மழையானது பெய்து வருகிறது. இதனால் சென்னையில் நாளை நடைபெறும் ஆட்டம் தடைபடுமா என்று சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

வானிலை: தென்மேற்கு பருவமழை முடிடையும் நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், மேற்கு தொடர்ச்சி மலை தொடர் பகுதிகளான, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மழையானது பெய்தது. இதையும் தாண்டி, சென்னையில், அவ்வப்போது, லேசனா மழை மற்றும் கன மழையானது பெய்து வருகிறது.

மேலும், காற்றின் திசை வேகத்தை வைத்து பார்க்கையில், சென்னையில் மழை என்பது நாளை மாலை பெய்ய வாய்புள்ளது என்று தெரிய வருகிறது. அந்த மழை மேகங்கள் மேற்கில் இருந்து கிழக்கில் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், சென்னை சேப்பாக்கத்தில், மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

மழை பெய்தால் யாருக்கும் வாய்பாக அமையும்: சென்னை சேப்பாக்கம் மைதானம் என்பது, சுழற்பந்து, மற்றும் பேட்டிங்க்கு சாதகமானது. இதில், எளிதாக 250 ரன்கள் வரை எடுக்கலாம். ஆனால், ஒரு வேலை மழையானது பெய்தால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களின் பக்கம் அமையும். ஆனால், மைதனாத்தில் மழை பெய்து ஈரமாக இருந்தால், எவ்வளவு தான் பேட்ஸ்மேன் அடித்தாலும், பந்து மைதானத்தில் பயணிப்பது என்பது கடினமானதாக இருக்கும்.

இந்திய அணிக்கு ஹாம் கிரோவுண்டு என்ற சாதகம் இருந்தாலும் அது ஆஸ்திரேலியா அணிக்கும் அது சாதகமாக அமையலாம். மேலும், மழையானது, மாலை நேரத்தில் வர வாய்ப்பு இருப்பதால், இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் அணிக்கு, ஆடுகளம் என்பது கடினமாக தான் இருக்கும்.

பிசிசிஐ-யின் தவறான முடிவு: இந்தியாவை பொருத்த வரை அக்டோபர் - நவம்பர் மாதம் என்பது மழைக்காலங்கள். தற்போது, தென்மேற்கு பருவமழை முடிவடைந்தாலும், வடகிழக்கு பருவ மழையானது, இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே, பயிற்சி ஆட்டங்கள் பெரும்பாலனது, மழையால் பாதிக்கபட்டது. அதில் இந்தியாவுக்கான போட்டிகளும் அடங்கும். மேலும், இந்த பருவ மழை தொடங்கும் காலத்தில் உலக கோப்பை தொடரை பிசிசிஐ நடத்துவது சரியானதாக இருக்கிறதா? இது தவறான முடிவு என கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் விமர்ச்சித்து வருகின்றனர்.

மேலும், மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் காலத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த வரும் நாட்களில் மழை என்பது பெய்யும். சென்னையின் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக சென்னையில் நாளை மாலை அல்லது இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்படி மழை பெய்யும் பட்சத்தில், ஆட்டம் ரத்தாவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால், ஆட்டத்தின் ஓவர்களை குறைபதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரு தங்கல் கதை... ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதித்த லாரி ஓட்டுநரின் மகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.