ETV Bharat / sports

பாக். எதிரான டி20 தொடர்: வில்லியம்சன், போல்ட் இருவருக்கும் ஓய்வு...!

author img

By

Published : Nov 17, 2020, 4:25 PM IST

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

williamson-boult-rested-for-t20is-against-west-indies-as-nzc-announces-squads
williamson-boult-rested-for-t20is-against-west-indies-as-nzc-announces-squads

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான டி20 அணியில் நியூசி. கேப்டன் வில்லியம்சன், நட்சத்திர பந்துவீச்சாளர் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டேவோன் கான்வாய், கெல் ஜேமிசன், ராஸ் டெய்லர் ஆகியோர் மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பதிலாக மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஸ்காட் குஜ்லஜின் ஆகியோர் மூன்றாவது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நியூசி. பயிற்சியாளர் கேரி கூறுகையில், '' இந்த சம்மரில் எந்த அளவிற்கு சிறப்பாக ஆட முடியுமோ, அந்த அளவிற்கு ஆட முயல்வோம். மூன்றாவது டி20 போட்டி நடக்கும்போதே, மற்றொரு புறம் டெஸ்ட் அணியை ஒருங்கிணை வேண்டிய தேவை உள்ளது.

இதுபோன்று இதுவரை செயல்பட்டதில்லை. இம்முறை செயல்படவுள்ளோம். டி20 தொடரில் காலின் முன்ரோ சேர்க்கப்படவில்லை. அந்த நேரத்தில் அவர் பிக் பாஷ் தொடரில் பங்கேற்கவுள்ளார்'' என்றார்.

நியூசிலாந்து டி20 அணி: டிம் சவுதி (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டேவோன் கான்வாய், ஃபெர்குசன், கப்தில், ஜெல் ஜேமிசன், மிட்சல், ஜிம்மி நீஷன், மிட்சல் சாண்ட்னர், இஷ் சோதி, கிளென் பிலிப்ஸ், டிம் செய்ஃபெர்ட், ராஸ் டெய்லர், பிரேஸ்வெல், ஸ்காட் குஜ்லஜின், மார்க் சாப்மேன்.

நியூசிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளெண்டெல், போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், ஜேமிசன், டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுதி, ராஸ் டெய்லர், வாக்னர், வாட்லிங், வில் யங்.

இதையும் படிங்க: லாரா, கெய்ல் கொடுத்த கிஃப்ட்... ரகசியம் வெளியிட்ட சச்சின்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.