ETV Bharat / sports

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு; இலங்கை பேட்டிங்!

author img

By

Published : Jun 4, 2019, 2:43 PM IST

கார்டிஃப்: உலகக்கோப்பை தொடரின் ஏழாவது போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை பேட்டிங் ஆடப் பணித்துள்ளது.

AFGvSL

உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்து, வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதன் ஏழாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குலாப்தீன் நைப் பந்துவீச்சைத் தேர்வு செய்து இலங்கை அணியை பேட்டிங் ஆடப் பணித்துள்ளார்.

இன்றையப் போட்டியில் இலங்கை அணியில் ஜீவன் மெண்டிஸ் நீக்கப்பட்டு பிரதீப் இடம்பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

குலாப்தீன் நைப் (கேப்டன்), முகமது சேஷாத், ஹஸ்ரத்துல்லா சேஷாய், ரஹ்மத் ஷா, முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், ஆஃப்டப் ஆலம், நஜிபுல்லா ஸத்ரான் (najibullah zadran), ஹமீத் ஹுசைன், தவ்லத் ஸத்ரான் (dawlat zadran).

இலங்கை அணி விவரம்:

திமுத் கருணரத்னே (கேப்டன்), குசால் பெரெரா, திரிமான்னே, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா, திசாரா பெரெரா, லக்மல், மலிங்கா, உடானா, பிரதீப்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.