ETV Bharat / sports

இருக்கையை பதம் பார்த்த மேக்ஸ்வெல் அடித்த சிக்சர்!

author img

By

Published : Mar 4, 2021, 12:31 PM IST

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது கிளென் மேக்ஸ்வெல் அடித்த சிக்சர் மைதானத்திலிருந்த இருக்கையை உடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Watch | NZ vs AUS: Glenn Maxwell's six breaks chair in stands
Watch | NZ vs AUS: Glenn Maxwell's six breaks chair in stands

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். போட்டியில், மேக்ஸ்வெல் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்திலிருந்த இருக்கையை உடைத்தது.

இந்தப் போட்டிக்கு பிறகு உடைந்த அந்த இருக்கை ஏலத்தில் விடப்பட்டது. மேலும் இருக்கையின் ஏலத்தொகையானது வீடில்லாதோருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் மேக்ஸ்வெல் உடைந்த இருக்கையில் தனது கையொப்பத்தையும் இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே ஓவரில் ஆறு சிக்சர்; மைதானத்தை அலறவிட்ட பொல்லார்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.