ETV Bharat / sports

16 மாதங்களுக்குப் பிறகு டி20யில் ரிஎன்ட்ரியாகும் மேத்யூஸ்

author img

By

Published : Jan 2, 2020, 1:05 PM IST

இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

Angelo Mathewsv
Angelo Mathews

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் மலிங்கா தலைமையிலான 16 வீரர்கள் அடங்கிய இலங்கை அணிக் குழு நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில், நட்சத்திர ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டி20 போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் மேத்யூஸ் இறுதியாக விளையாடியிருந்தார்.

Angelo Mathews
மேத்யூஸ்

இலங்கை அணி விவரம்: மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, அபிஷ்கா ஃபெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், துசன் ஷனகா, குசல் பெரேரா, நிராஷன் திக்வேலா, தனஞ்ஜெய டி சில்வா, இசுரு உதானா, பவனகா ராஜபக்சே, ஒஷாடா ஃபெர்னாண்டோ, ஹசரங்கா, கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா, குசல் மெண்டிஸ், லக்ஷன் சண்டகன்.

இதைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று கொழும்புவிலிருந்து புறப்பட்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் ஜனவரி ஐந்தாம் தேதி குவஹாத்தியில் தொடங்கவுள்ளது.

இந்தியா vs இலங்கை டி20 போட்டி அட்டவணை:

  1. முதல் டி20 போட்டி - குவஹாத்தி, ஜனவரி 5
  2. இரண்டாவது டி20 போட்டி - இந்தூர், ஜனவரி 7
  3. மூன்றாவது டி20 போட்டி - புனே, ஜனவரி 9

இதையும் படிங்க: வயது மோசடியில் ஈடுபட்ட உலகக்கோப்பை நட்சத்திரம்..! அணியிலிருந்து அதிரடியாக வெளியேற்றம்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/sri-lanka-names-angelo-mathews-for-t20i-series-against-india/na20200101200337146


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.