ETV Bharat / sports

18 மாதங்களுக்குப் பிறகு முதல் தரப் போட்டியில் சதம் அடிக்கும் ஷிகர் தவான்!

author img

By

Published : Dec 25, 2019, 9:32 PM IST

ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரரும் டெல்லி அணியின் கேப்டனுமான ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Shikhar Dhawan
Shikhar Dhawan

இந்தியாவில் முதன்மை உள்ளூர் கிரிக்கெட் போட்டியாக கருத்தப்படும் ரஞ்சி கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனுக்கான போட்டிகள் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. ஏற்கனவே முதல் இரண்டு சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், மூன்றாம் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

இதில் டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரராக கேப்டனும் இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ஷிகர் தவான் களமிறங்கினார்.

ஒருமுனையில் மற்ற டெல்லி வீரர்களான குனால் சண்டிலா (1), துருவ் ஷோரே (0), நிதிஷ் ராணா (25), ஜான்டி சித்து (15), லலித் யாதவ் (19), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஷிகர் தவான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இவரது சதத்தால் டெல்லி அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 66 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்களை எடுத்தது. தவான் 198 பந்துகளில் 19 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 137 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

ஷிகர் தவான்!
ஷிகர் தவான்

இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஷிகர் தவான் 18 மாதங்களுக்குப் பின் முதல் தர போட்டியில் சதம் அடித்துள்ளார். இறுதியாக, கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருந்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதும் முதல் தர போட்டியின் கீழ் கணக்கிடப்படும் என்பது நினைவுகூரத்தக்க வேண்டிய விஷயமாகும்.

காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடமல் இருந்த ஷிகர் தவான் தற்போது இலங்கை அணிக்கு எதிராக அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘நான் எதையும் மறக்கவில்லை’ - தவான் இஸ் பேக்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/shikhar-dhawan-smashes-century-against-hyderabad-in-ranji-trophy/na20191225200347864


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.