ETV Bharat / sports

காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்!

author img

By

Published : Oct 21, 2019, 4:32 PM IST

கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Hasan ali injured

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் இந்தாண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது முதுகில் காயமடைந்தார்.

அதன்பின் காயம் காரணமாக அவர் பாகிஸ்தான் அணி பங்கேற்ற எந்தவொரு தொடரிலும் இடம்பெறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் விளையாடவுள்ளது.

ஆனால் ஹசன் அலி முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த தொடரிலும் இடம்பிடிக்க மாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியதின் அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஹசன் அலிக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் அவரால் இத்தொடரிலும் பங்கேற்க இயலாது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மேலும் ஓய்வு தேவைப்படுகிறது எனத் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிகிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான சர்ப்ராஸ் அகமதுவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி டெஸ்ட் கேப்டனாக அசர் அலியையும், டி20 கேப்டனாக பாபர் அசாத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:#INDvsRSA: மீண்டும் ஃபாலே ஆன் ஆன தென் ஆப்பிரிக்கா - இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்

Intro:Body:

Hasan ali injured 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.