ETV Bharat / sports

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

author img

By

Published : Jan 16, 2020, 12:17 PM IST

இந்திய அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி, New Zealand, Kane williamson
New Zealand, Kane williamson

இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளும் முதலில் டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது.

மீண்டும்வந்த வில்லியம்சன்

இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது டி20 தொடரில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து வீரர்களின் பெயரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டுள்ள கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

அதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் ஹமீஷ் பென்னட் நீண்ட இடைவேளைக்குப்பின் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப்பின் தற்போதே நியூசிலாந்து அணியில் விளையாடுகிறார். எனினும் உள்ளூர் டி20 போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காயத்திலிருந்த மீளாத வீரர்கள்

நியூசிலாந்து அணியின் டிம் சவுதி, பிளேர் டிக்னர், ஸ்காட் குஜ்ஜெல்ஜின் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களுடன் கூடுதலாக பென்னட் இணைந்துள்ளார். சுழல்பந்துவீச்சில் மிட்சல் சாண்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

போல்ட், பெர்குசன், மேட் ஹென்ரி, டக் பிரேஸ்வெல், ஆடம் மில்னே ஆகியோர் காயத்திலிருந்து குணமடையாத காரணத்தினால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், ஸ்காட் குஜ்ஜெல்ஜின், டேரில் மிட்சல், காலின் மன்ரோ, ராஸ் டெய்லர், பிளேர் டிக்னர், மிட்சல் சாண்டனர், டிம் செய்பெர்ட், இஷ் சோதி, ஹமிஷ் பென்னட், டிம் சவுதி.

இதையும் படிங்க: முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸை அலறவிட்ட அயர்லாந்து!

Intro:Body:

dd


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.