ETV Bharat / sports

'கோலியிடமிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது' - கிளென் மேக்ஸ்வெல்

author img

By

Published : Mar 1, 2021, 7:01 PM IST

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வேல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடவுள்ளார்.

Maxwell eager to learn from 'pinnacle of the game' Kohli at RCB
Maxwell eager to learn from 'pinnacle of the game' Kohli at RCB

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், சிறப்பாக செயல்படாததால், நடப்பு ஆண்டு தொடருக்கு முன்னதாக அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை ஒப்பந்தம் செய்தது.

இதுகுறித்து பேசியுள்ள மேக்ஸ்வெல், “ஆர்சிபி அணி என்னை தேர்வு செய்துள்ளது எனது அடுத்த கட்டத்திற்கான முயற்சி என நினைக்கிறேன். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அரசனாக வலம் வரும் விராட் கோலி தலைமையின் கீழ் விளையாட மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன்.

அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். ஏனெனில் நான் விளையாட்டில் மட்டுமே ஆர்வத்துடன் உள்ளேன். ஆனால் நான், உடற்பயிற்சியிலும், தலைமைக்கான பண்புகளிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வயது குறித்த சர்ச்சையில் சிக்கிய அஃப்ரிடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.