ETV Bharat / sports

இந்த வருடத்தின் 'டானாக மாறும் லபுசானே'!

author img

By

Published : Jan 4, 2020, 2:12 PM IST

மாற்றுவீரராக அணியில் நுழைந்து தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் ரன்மெஷினாக மாறியுள்ளார் மார்னஸ் லபுசானே. நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்ஸில் விளையாடி 490 ரன்களை குவித்துள்ளார்.

Marnus Labuschagne
Marnus Labuschagne

வாய்ப்புகள் கிடைக்காது அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசானே. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறங்கிய அவர் குறுகிய காலக்கட்டத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனாக மாறியுள்ளார்.

அவரது கிரிக்கெட் பயணத்தை ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின் என்றுதான் கூற வேண்டும். ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இவர் 210 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நான்கு அரைசதம் உள்பட 353 ரன்களை எடுத்தார்.

Marnus Labuschagne
லபுாசேன

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து இரண்டு சதம் என மிரட்டல் ஃபார்மிலிருந்த அவர் அதே ஃபார்மில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டில் இவர் விளையாடிய கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதம், ஆறு அரைசதம் என 970 ரன்களை குவித்துள்ளார்.

இதனால் கடந்தாண்டு தொடக்கத்தில் டெஸ்ட் தரவரிசையில் 110ஆவது இடத்திலிருந்த அவர் 106 இடங்கள் முன்னேறி தற்போது 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சிட்னியில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இப்போட்டி இந்த வருடத்தின் முதல் டெஸ்ட் போட்டியாகும். 2019ஆம் ஆண்டை எந்த அளவிற்கு சிறப்பாக முடித்தாரோ அதே உத்வேகத்துடன் 2020ஆம் ஆண்டிலும் தனது ரன் கணக்கை தொடங்கியுள்ளார் லபுசானே. இப்போட்டியில் வார்னர் 45 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், ஒருபக்கம் நங்கூரமாய் நின்று பேட் செய்த லபுசானே அரைசதம், சதம், 150 என தனது ரன்னை உயர்த்திகொண்டே சென்று இறுதியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 363 பந்துகளில் 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 215 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த வருடத்தின் டெஸ்ட் போட்டிகளில் முதல் அரைசதம், சதம், இரட்டை சதம் அடித்த பெருமை இவருக்கு உண்டு. நியூசிலாந்துக்கு எதிராக இந்த டெஸ்ட் தொடரில் அவர் அடித்த ரன்கள் (143, 50, 63, 19, 215) என ஒரு இரட்டை சதம், ஒரு சதம், இரண்டு அரசைதம் என 490 ரன்களைக் குவித்துள்ளார்.

Marnus Labuschagne
லபுாசேன

தனது சிறப்பான பேட்டிங்கால் இதுவரை விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் 1400 ரன்கள் எடுத்த இவரது பேட்டிங் ஆவரேஜ் 63.64ஆக உள்ளது. இது ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் ஆவரேஜை விட அதிகம். ஸ்டீவ் ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் 7227 ரன்கள் என அவரது பேட்டிங் ஆவரேஜ் 62.84தான். இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்திய லபுசானே இதே ஃபார்மை இந்த ஆண்டு முழுவதும் கடைபிடித்து 2020ஆம் ஆண்டின் டானாக மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Marnus Labuschagne
லபுாசேன

இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால கேப்டன் பொறுப்புக்கு மார்னஸ் லபுசானே சரியாக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கேப்டன் பொறுப்புக்கு லபுசானே சரியாக இருப்பார்' - பாண்டிங் கணிப்பு

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/aus-vs-nz-marnus-labuschagne-scores-maiden-test-double-ton/na20200104104328874


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.