ETV Bharat / sports

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

author img

By

Published : Sep 21, 2020, 5:50 PM IST

ஐபிஎல் டி20 தொடரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

Kohli's RCB aim to start season with win against SRH
Kohli's RCB aim to start season with win against SRH

நெருக்கடிக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அதிரடி பேட்டிங் வரிசை, பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் என இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையில் களமிறங்கு பெங்களூரு அணி, இதுவரை நடைபெற்ற 12 ஐபிஎல் சீசன்களில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை சென்றும், ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்றவில்லை.

விராட் கோலி
விராட் கோலி

ஒவ்வொரு ஆண்டும் டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், அல்பீ மோர்கல், யுவராஜ் சிங், கே.எல். ராகுல், மோயீன் அலி, டேல் ஸ்டெயின் என பல நட்சத்திர வீரர்களைக் கொண்டு களமிறங்கினாலும், பெங்களூரு அணிக்கு அதில் எதுவுமே பலனளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களின் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஏபிடி - விராட் கோலி
ஏபிடி - விராட் கோலி

இதனால் கடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது ஆரோன் ஃபிஞ்ச், கிறிஸ் மோரிஸ், ஆடம் ஸாம்பா என அதிரடி வீரர்களை ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது. அதேபோல், ஏபிடி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், யுஸ்வேந்திர சஹால், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அணியில் தக்கவைத்துக் கொண்டது.

ஆர்சிபி
ஆர்சிபி

அதிரடியான பேட்டிங் ஆர்டரையும், சாதுரியமான பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ள பெங்களூரு அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டி வருகிறது. கிரிக்கெட்டின் அரசன் கோலியின் வியூகம் இந்த சீசனில் எடுபடுமா? என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏ சாலா கப் நம்தே...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அதிரடி மன்னன் டேவிட் வார்னர் தலைமையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரை களம் காணவுள்ள ஹைதராபாத் அணி, முதல் போட்டியில் வெற்றியை ஈட்ட கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடந்த 2016 ஆண்டு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி, சிஎஸ்கே அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் கடந்த சீசனிலும் பிளே ஆஃப் சுற்றோடு வெளியேறியது.

ஜானி பேர்ஸ்டோவ்
ஜானி பேர்ஸ்டோவ்

அதனால் இந்த சீசனில் நிச்சயம் கோப்பையை வெல்லும் எண்ணத்தோடு, ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது மிட்செல் மார்ஷ், பாபியன் ஆலன் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. அதேசமயம் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவ், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், விஜய் சங்கர், முகமது நபி ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் வார்னரின் அதிரடியிலும், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பாலும் வெற்றி பெற்று வந்த ஹைதராபாத் அணிக்கு, இந்தாண்டும் அந்த அதிர்ஷ்டம் நீடிக்குமா என்பது ஆட்டத்தின் முடிவுக்குப் பிறகே தெரியவரும்.

நேருக்கு நேர்:

பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

உத்தேச அணி:

ஆர்.சி.பி.,: ஆரோன் ஃபிஞ்ச், பார்த்தீவ் படேல், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், குர்கீரத் சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால்.

எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, சந்தீப் சர்மா, பசில் தம்பி.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: நேருக்கு நேர்... டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.