ETV Bharat / sports

'கப் அடிக்கா விட்டாலும் டெல்லி ப்ளேயர்ஸ் மேல நம்பிக்கை வைங்க'

author img

By

Published : Nov 10, 2020, 6:38 PM IST

மும்பை: இன்றைய இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் அந்த அணியில் இருக்கும் திறமையான வீரர்களை அணியிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அறிவுரை கூறியுள்ளார்.

IPL 2020
IPL 2020

ஐபிஎல் ஏலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆகியவை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துகள் பின்வருமாறு:

ஐபிஎல் தொடருக்காக வீரர்களை ஏலம் எடுக்கும் போது ஒவ்வொரு அணிக்கும் நிச்சயம் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு அணி ஏலம் எடுக்க விரும்பிய வீரரை இன்னொரு அணியும் விரும்பினால் அதிக பணம் செலவளிக்க வேண்டும். ஒரு அணி நிர்வாகம் வீரர் ஒருவரை விடுவித்தாலும் அதற்கு இணையான மற்றொரு வீரரை ஏலம் எடுக்கும் வியூகத்தை அமைத்திருப்பார்கள்.

ஏலத்தில் விரும்பிய வீரரை எடுக்க முடியாமல் போனாலும் தொடரின் நடுவே டிரான்ஸ்பர் முறையில் அவ்வீரரை உங்களால் வாங்க முடியும். அப்போது நிலைமை உங்கள் கைகளில் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு ஏலத்தில் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு அணியும் மூன்றே மூன்று கோணங்களில்தான் வீரர்களை ஏலம் எடுக்குகிறார்கள். முதலாவது வெளிநாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள், இரண்டாவது இந்திய ஸ்பின்னர்கள், மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன்கள்.

இந்த விசயத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும்பான்மையான திறமையான வீரர்களைத் தன்வசம் கொண்டுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர்கள் கோப்பையை வென்றாலும், வெல்லாவிட்டாலும் அந்தத் திறமையான வீரர்கள் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து அடுத்த சீசனிலும் தக்கவைக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்தால் இன்று முடியாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கோப்பையை வெல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: கப் மேல ஆசை இருந்தா, இவங்க 5 பேரும் ஆடியே ஆகணும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.