ETV Bharat / sports

யுஏஇ தட்பவெட்ப நிலைக்கு பொருந்துவதுதான் பெரும் சவால் : போல்ட்

author img

By

Published : Sep 14, 2020, 9:29 PM IST

Updated : Sep 14, 2020, 9:42 PM IST

ஐபிஎல் தொடரில் ஐக்கிய அரபு அமீரத்தின் தட்பவெட்ப நிலைக்கு பொருத்திக் கொள்வதுதான் வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ட்ரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

ipl-2020-biggest-challenge-will-be-to-adjust-to-uae-conditions-says-trent-boult
ipl-2020-biggest-challenge-will-be-to-adjust-to-uae-conditions-says-trent-boult

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி ஆடுகிறது.

இந்நிலையில், மும்பை அணிக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ட்ரென்ட் போல்ட், ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ளார். மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா தொடரிலிருந்து விலகியதால் போல்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசுகையில், ''நியூசிலாந்து ஒரு சிறிய நாடு. அங்கு இப்போது மழைக்காலம் என்பதால் ஆறு முதல் ஏழு டிகிரி வரை தட்பவெட்ப நிலை இருக்கும். ஆனால் இங்கு பாலைவனங்களுக்கு நடுவே 45 டிகிரி வெப்பம் இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் வீரர்கள் தங்களைப் பொருத்திக்கொள்வது தான் மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

முன்னதாக சில அணிகளுக்காக நான் ஆடியுள்ளேன். ஆனால் மும்பை அணிக்காக ஆடுவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் மும்பை அணியில் பல வேற்றுமைகள் உள்ளன. ஆனால் அனைவரும் அணியாக, குழுவாக சிறப்பாக செயல்படுகிறார்கள்.

நான் இந்த மைதானங்களில் சில போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். அதனால் அந்த அனுபவத்தைக் கொண்டு நிச்சயம் சிறப்பாக பந்துவீசுவேன். மும்பை அணியின் பந்துவீச்சுக் கூட்டணி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமும்...! - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Last Updated : Sep 14, 2020, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.