ETV Bharat / sports

பாக்ஸிங் டே டெஸ்ட்: 2ஆவது இன்னிங்ஸிலும் தடுமாறும் ஆஸி.!

author img

By

Published : Dec 28, 2020, 10:11 AM IST

Updated : Dec 28, 2020, 10:25 AM IST

இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

ind vs aus: Australia are trailing by 66 runs as teams head for the tea break
ind vs aus: Australia are trailing by 66 runs as teams head for the tea break

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நேற்று முந்தினம் (டிச. 26) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, கேப்டன் ரஹானேவின் அசத்தலான சதத்தால், இரண்டாம் நாள் ஆட்டத்தின் போதே முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களுக்கு இன்னிங்ஸை நிறைவுசெய்தது.

இந்திய அணி தரப்பில் கேப்டன் ரஹானே 112 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லபுசாக்னேவும் 28 ரன்களில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் - ஸ்டீவ் ஸ்மித் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவருகிறது.

இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் மேத்யூ வேட் 27 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் உமஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க:துபாய் டி’ ஓர்: ரொனால்டோ, லெவாண்டோவ்ஸ்கிக்கு விருது!

Last Updated : Dec 28, 2020, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.