ETV Bharat / sports

மூன்றாவது டெஸ்ட்: ஜடேஜா சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா!

author img

By

Published : Jan 8, 2021, 9:30 AM IST

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

IND vs AUS, 3rd Test: Jadeja, Bumrah bring India back in the game
IND vs AUS, 3rd Test: Jadeja, Bumrah bring India back in the game

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று (ஜன. 07) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் அணியில் மார்னஸ் லபுசாக்னே 67 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடந்தனர்.

இன்றைய ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அணிக்கு உதவினார்.

மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லபுசாக்னே 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆஸ்திரேலிய அணி தடுமறியது.

இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்டில் தனது 27ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இருப்பினும் இறுதியில் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களையும், லபுசாக்னே 91 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஐஎஸ்எல் : ஒடிசாவுக்கு முதல் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.