ETV Bharat / sports

இன்றுடன் முடிவுக்கு வந்த ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை!

author img

By

Published : Sep 13, 2020, 7:01 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐயால் விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

i-am-free-says-s-sreesanth-after-spot-fixing-ban-ends
i-am-free-says-s-sreesanth-after-spot-fixing-ban-ends

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஸ்ரீசாந்த். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த மூன்று பேருக்கும் பிசிசிஐ சார்பாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டார். இதனால் தனது வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். அதில் கேரள நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் தடையை நீக்கியது.

இதை எதிர்த்து, கூடுதல் அமர்வில் பிசிசிஐ முறையிட்டது. அதில் நீதிபதிகள் ஸ்ரீசாந்தின் தடையை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கில், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை மறுபரீசிலனை செய்யவும், தண்டனையைக் குறைக்கவும் உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிசிசிஐ விசாரணை அலுவலர் டிகே ஜெயின் ஏழு ஆண்டுகள் அவருக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த விசாரணைக் காலத்திலேயே ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்றுடன் மொத்த தடைக்காலமும் முடிவடைந்துள்ளது. இதனால் ஸ்ரீசாந்த் இந்த ஆண்டு நடக்கவுள்ள உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

ஏற்கனவே ஸ்ரீசாந்த் தனது உடற்தகுதியை நிரூபித்ததால் கேரள ரஞ்சி அணியில் அவருக்கு இடம்கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • I’m completely free of any charges nd anything nd now gonna represent the sport I love the most.will give my very best to every ball I ball even it’s just practice.just have another 5 to 7 years max to give it all I’ve got nd I will give the very best to any team I play

    — Sreesanth (@sreesanth36) September 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஸ்ரீசாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''நான் சாதாரண போட்டிகளிலேயே ஏமாற்றியதில்லை. இப்போது அனைத்து தடைகளிலிருந்தும் வெளிவந்துள்ளேன். நான் அதிகமாக நேசிக்கும் விளையாட்டினை விளையாடப் போகிறேன். இனி நான் வீசும் ஒவ்வொரு பந்தையும் சிறப்பாக வீசுவேன். அது பயிற்சியாக இருந்தாலும் சரி'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நான் எப்படி வர வேண்டும் என நினைத்தாரோ, அப்படி இருக்கவே விரும்புகிறேன்' கோப் பிரையன்ட் குறித்து ஒசாகா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.