ETV Bharat / sports

‘இவங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே பா..!’ இங்கிலாந்து ரசிகர்களின் அட்ராசிட்டிஸ்!

author img

By

Published : Aug 20, 2019, 4:07 AM IST

பல்வேறு ஸ்மைலி எமோஜி போல், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் இங்கிலாந்து ரசிகர்கள் நடந்துகொள்வது வெறுக்கதக்கதாக உள்ளது.

இவங்க கேரக்டரே புரிஞ்சக்க முடியலை

2018 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பென்கிராஃப்ட் ஆகியோர் சிக்கனர். இதனால், இவர்களுக்கு ஒராண்டு காலம் தடை விதிக்கப்பட்ட பின்னர், உலகக்கோப்பையில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஒருநாள் போட்டியில் ரிஎண்ட்ரி தந்தனர்.

ஆஸ்கர்’ஸ்
ஆஸ்கர்’ஸ்

இதையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடர்மூலம், ஸ்மித், வார்னர், பென்கிராஃப்ட் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினர். ஆனால், இங்கிலாந்து ரசிகர்களும், அவர்களது பார்பி ஆர்மி ரசிகர்களும் இவர்களை அதிகம் கேலி செய்தே வருகின்றனர். குறிப்பாக, ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகர் விருது யாருக்கு என்று இவர்கள் அழும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து, உலகக்கோப்பை தொடருக்கான வார்னரின் பிரத்யேக ஜெர்சியில் ஆஸ்திரேலியா என்கிற இடத்துக்கு பதிலாக ஏமாற்றுக்காரன் என எடிட் செய்தனர்.

வார்னர்
வார்னர்

இப்படி ரசிகர்கள் அதிகம் கிண்டலும், கேலியும் செய்யும் நிலையில், இவர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்ற ஆர்வம் மற்ற நாட்டு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ‘நீ என்ன வேணும்னா சொல்லு நான் பேட்டிங் செய்வேன்’ என்பதைப் போலவே, முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து மிரட்டலான கம்பேக் தந்தார்.

அதேசமயம், அப்போட்டியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த வார்னரை நோக்கி ரசிகர்கள் மீண்டும் கேலி செய்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் வார்னரின் பாக்கெட்டில் சாண்ட் பேப்பர் உள்ளது என கத்தியுள்ளார். இதைக்கேட்ட வார்னர் உடனடியாக தனது இரண்டு பேண்ட் பாக்கெட்டிலும் கையை விட்டு வெளியே எடுத்து அதில் ஏதும் இல்லை என்று காண்பித்தார்.

ரசிகர்களிடம் நிரூபித்தல்
ரசிகர்களிடம் நிரூபித்தல்

இதையெல்லாம் விட லார்ட்ஸ் போட்டியில், இங்கிலாந்து ரசிகர்கள் நடந்துகொண்டதுதான் அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாகனையும் முகம் சுழிக்கச்செய்துள்ளது. கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித்தை அவுட் செய்ய முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். தூண் போல் தனது அணியை தாங்கிக் கொண்டிருந்த அவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் பவுன்சர் பந்தால் தாக்கினார். இதனால், நிலைத்தடுமாறிய ஸ்மித் 80 ரன்களுடன் ரிடையர்ட் ஹர்ட் (Retired Hurt) முறையில் பெவிலியன் திரும்பினார்.

ஸ்மித் தலையில் அடி கொடுத்த பவுன்சர்
ஸ்மித் தலையில் அடி கொடுத்த பவுன்சர்

சிறப்பாக பேட்டிங் செய்த அவருக்கு இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டி (Standing ovation) தந்தது, பாராட்டியது அனைவரும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால், இந்த ஆச்சரியம் நீண்ட தூரம் நீடிக்கவில்லை. ஏனெனில், ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், மீண்டும் தனது அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது, ரசிகர்கள் யாருக்கு Standing ovation தந்தார்களோ அவரை கேலி (boo) செய்தனர்.

பவுன்சர் பந்து தாக்கியும் அணிக்காக பேட்டிங் செய்து வருபவரை கேலி செய்வதா என யோசிக்கும் ஸ்மைலி எமோஜியுடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டெமியன் பிளெமிங் ட்வீட் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, களத்துக்கு திரும்பிய ஸ்மித் மூன்று பவுண்ட்ரிகள் அடித்து, 92 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, ரசிகர்கள் மீண்டும் இவருக்கு எழுந்து நின்று கைகளைத் தட்டினர்.

மைக்கேல் வாவின் ட்வீட்
மைக்கேல் வாவின் ட்வீட்
ஃபிலம்மிங் ட்வீட்
ஃபிலம்மிங் ட்வீட்

பின்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக, மார்னஸ் லாபுக்ஸக்னே மாற்று வீரராகக் களமிறங்கினார். இதனிடையே, இங்கிலாந்து ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித்திடம் நடந்து கொண்டது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் ட்வீட் செய்தார். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தனது திறமையுடன் சிறப்பாகப் பேட்டிங் செய்யும் அவரை கேலி செய்ய வேண்டிய அவசியம் இங்கு இல்லையே என பதிவிட்டிருந்தார்.

Intro:Body:

England fans booed and praised steve smith in lords test


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.