ETV Bharat / sports

மூன்றாவது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!

author img

By

Published : Feb 14, 2021, 2:32 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் (பகலிரவு ஆட்டம்) போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்.14) தொடங்கியது.

Booking of tickets for third India-England Test from Sunday
Booking of tickets for third India-England Test from Sunday

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு 50 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற அரசின் உத்தரவுப்படி சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மொடீரா டெஸ்ட் போட்டியிலும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

  • CRICKET CARNIVAL IS BACK IN APNU AMDAVAD after 6 long years.
    The largest cricket stadium in the world is all ready to host & witness the Paytm Test Series 2021 between IND &ENG
    We start the sale of tickets for the first Test match from tomorrow Sunday 14th feb@BCCI#GCA #INDvENG pic.twitter.com/841EQBj2IK

    — Gujarat Cricket Association (Official) (@GCAMotera) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைடுத்து பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று (பிப்.14) முதல் தொடங்கப்படும் என குஜராத் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் தன்ராஜ் நாத்வானி அறிவித்துள்ளார். மேலும் இப்போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.300 முதல் ஆயிரம் ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறவுள்ள மொடீரா மைதானத்தின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்தும் இந்தியா; திணறும் இங்கிலாந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.