ETV Bharat / sports

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மாஸ் காட்டிய அக்சர் படேல்

author img

By

Published : Aug 29, 2019, 10:16 PM IST

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அக்சர் படேலின் ஆட்டத்தால் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

axar-patel

ஐந்து ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவிற்கு வருகைத்தந்துள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று திருவனந்தப்புரத்தில் நடைபெற்றது.

மைதானம் ஈரப்பதத்துடன் இருந்ததால், ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 35.5 ஓவர்களில் 206 ரன்களை எடுத்து ஆறு விக்கெட்டுகளை எடுத்துத் திணறியது.

இந்த இக்கட்டான நிலையில், ஜோடி சேர்ந்த ஷிவம் துபே, அக்சர் படேல் இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக அக்சர் படேல் 36 பந்துகளில் ஆறு பவுண்ட்ரி, மூன்று சிக்சர் என 60 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.

மறுமுனையில் ஷிவம் துபே மூன்று பவுண்ட்ரி, ஆறு சிக்சர் என 79 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இதனால், இந்திய அணி 47 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களை குவித்தது.

இதைத்தொடர்ந்து, 328 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், அந்த அணியின் தொடக்க வீரரான ரிசா ஹென்ட்ரிக்ஸ் சதம் விளாசினார்.

ஆனாலும், அவருக்கு துணையாக எந்த வீரரும் பேட்டிங் செய்யவில்லை. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 45 ஓவர்களில் 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்தியா ஏ அணி இப்போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா தரப்பில் சஹால் ஐந்து, அக்சர் படேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.