ETV Bharat / sports

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

author img

By ANI

Published : Oct 28, 2023, 1:48 PM IST

Australia announce 15-player squad for T20I series against India: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் வரும் நவம்பர் 23ஆம் தேதி தொடங்க இருப்பதால், அதற்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Australia announce 15-player squad for T20I series against India
Australia announce 15-player squad for T20I series against India

மெல்போர்ன்: ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியானது வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது.

இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹசல்வுட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இந்த தொடரில் இடம் பிடித்துள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், “இந்த அணி அனுபவம் கலந்த இளம் வீரர்களைக் கொண்டுள்ள அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மார்ஸ் தலைமை தாங்கியதுபோல் தற்போது இந்த தொடரில் மேத்யூ வேட் அணியை வழிநடத்தவுள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அணியை வழிநடத்துவதில் நல்ல அனுபவத்தை பெற்றுத் தரும்" என்றார்.

போட்டியின் அட்டவனை:

முதல் டி20 போட்டி - நவம்பர் 23 - விசாகப்பட்டினம்

2வது டி20 போட்டி - நவம்பர் 26 - திருவனந்தபுரம்

3வது டி20 போட்டி - நவம்பர் 28 - கவுகாத்தி

4வது டி20 போட்டி - டிசம்பர் 1 - நாக்பூர்

5வது டி20 போட்டி - டிசம்பர் 3 - ஹைதராபாத்

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் விவரம்:

மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு போட்டி; 100 பதக்கங்களைக் கடந்து வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.