ETV Bharat / sports

SL VS BAN: டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 3:30 PM IST

Asia Cup 2023 Super Four 2nd Match: ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டத்தில், இலங்கை எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

SL VS BAN
SL VS BAN

கொழும்பு: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 ஆணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவு பெற்றர் நிலையில், இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று (செப்டம்பர் 09) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஒரே ஒரு மாற்றமாக வங்கதேச அணியில் அபிப் ஹுசைனுக்கு பதிலாக நசும் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11:

வங்கதேசம்: முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(விகீ), ஷமிம் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நசும் அகமது.

இலங்கை: பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ்(விகீ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன.

இதையும் படிங்க: Neymar: பீலேவை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த நெய்மர்! எதுல தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.