ETV Bharat / sports

Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் அணி நாளை மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:01 PM IST

Asia Cup 2023 India Vs Pakistan: இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 02) இலங்கை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்
India vs Pakistan

ஹைதராபாத்: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் என 6 அணிகள் பங்கேற்கும் 16வது ஆசிய ஒருநாள் கோப்பை கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது லீக் போட்டி நாளை (செப்டம்பர் 02) உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய அணி முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மோதின, அதில் இந்தியா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது வரும் அக்டோபர் மாதம் ஐசிசி உலக கோப்பை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியிலேயே நேபாள அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வலிமையான நிலையில் உள்ளது. அணியின் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் அடித்து தனது 19வது சதத்தை பதிவு செய்தார். இப்திகார் அகமது தனது ஆக்கிரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 71 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். பவுலிங்கில் ஷதாப் கான் 4 விக்கெட்களை வீழ்த்தி அணியை சுலபமாக வெல்ல வழிவகை செய்தார். ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் என வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

  • Get ready for the ultimate clash as 6 top Asian teams fight for supremacy in the Men's ODI Asia Cup! Exciting matches await in Pakistan (2:30 PM Pak time) and Sri Lanka (3:00 PM SL local time). Let the battle begin! 🏆 #ACC pic.twitter.com/kh9YJM8phK

    — AsianCricketCouncil (@ACCMedia1) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை ஆசிய கோப்பையின் முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணியை ஜஸ்பிரிட் பும்ரா தலைமை தாங்கினார். அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பையில் தேர்வாகி விளையாட உள்ளார். அவரின் தாக்குதல் எவ்வாறு இருக்க போக்கிறது என்பதை பெருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் இருப்பார். பேட்டிங்கை பெருத்தவரை தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் களம் இறங்கிவார் என எதிர்பார்க்கபடுகிறது.

வழக்கமாக சூழல் பந்து வீச்சாளர்களை வெளுத்துவாங்கும் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார். மிடில் ஆடரில் அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெருகிறது. மேலும், இடது கை பேட்டரான திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி நாளை 3மணி அளவில் தொடங்க உள்ளது.

கணிக்கப்பட்ட அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன்(வ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ்.

பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விகீ), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.

இதையும் படிங்க: Asia Cup 2023 SL VS BAN: வங்காள தேசத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.