ETV Bharat / sports

இராண்டாவது போட்டியிலும் மண்ணை கவ்விய சிந்து!

author img

By

Published : Dec 12, 2019, 9:49 PM IST

சீனா: வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்துள்ளார்.

BWF Tour Finals: Sindhu loses to Chen Yu Fei
BWF Tour Finals: Sindhu loses to Chen Yu Fei

உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் மூலம் நடத்தப்படும் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தாண்டு சீனாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அதனைத் தொடர்ந்து பி.வி.சிந்து இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் யு ஃபெய்யை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 22-20 என்ற புள்ளி கணக்கில் கைபற்றினார். ஆனால் அதனைத் தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யு ஃபெய் இரண்டாவது சுற்றை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவிற்கு அதிர்ச்சியளித்தார்.

அதன்பின் நடைபெற்ற மூன்றாவது செட்டுக்கான ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்திய யு ஃபெய் 21-12 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி சிந்துவை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டுசென்றார்.

  • HSBC BWF World Tour Finals 2019
    WS - Round 1
    20 21 21 🇨🇳Yu Fei CHEN🏅
    22 16 12 🇮🇳V. Sindhu PUSARLA

    🕗 in 72 minutes
    https://t.co/L1epfcsFRA

    — BWFScore (@BWFScore) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் சீனாவின் யு ஃபெய் 22-20, 21-18, 21-12 என்ற கணக்கில் பி.வி. சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: மினர்வா அணியிடம் வீழ்ந்த சென்னை சிட்டி எஃப்சி!

Intro:Body:

PV Sindhu loses to Chen Yu Fei; out of semifinal contention


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.