ETV Bharat / sitara

லெஜண்ட் சரவணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகிபாபு

author img

By

Published : Jul 26, 2021, 1:35 PM IST

நகைச்சுவை நடிகர் யோகி பாபு அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்தநிலையில் லெஜண்ட் சரவணனுடன் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் இன்று மீண்டும் கேக் வெட்டி படக்குழுவுடன் அவர் பிறந்த நாள் கொண்டாடினார்.

லெஜண்ட் சரவணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகிபாபு
லெஜண்ட் சரவணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகிபாபு

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் 'Production Number 1' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவ்வப்போது படம் பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள் வெளிவரும்.

இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மீண்டும் கேக் வெட்டி கொண்டாடினர்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மாலிக்கை பார்த்த விக்ரம் டீம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.